ஆ. இராமச்சந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆ. இராமச்சந்திரன் (A. Ramachandran) என்பவர் தமிழ்நாட்டு அரசியலரும், சேலத்தின் தற்போதைய நகரத்தந்தையும் (மேயர்) ஆவார்.[2][3][4]. 1961-ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உறுப்பினராக உள்ள இவர், அக் கட்சியின் சேலம் பிரிவில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.[5][6][7]
Remove ads
தொடக்க வாழ்க்கை
1944 ஆம் ஆண்டு சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு மகனாகப் பிறந்த இராமச்சந்திரன், பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.
அரசியல்
தொடக்க காலமும் அறிந்தேற்பும்
1961-ஆம் ஆண்டு, இராமச்சந்திரன், அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) சேர்ந்தார். திமுக நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர், ஆற்காடு வீராசாமி, க. சுந்தரம், பரிதி இளம்வழுதி, சொ. சிட்டிபாபு போன்ற மூத்த திமுக தலைவர்களுடன் பழகினார்.[8][9] தான் சென்னையில் தங்கியிருந்த மூன்றாண்டு காலத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி ஏராளமான திமுக கொடிக்கம்பங்களை அமைக்க சிட்டிபாபுவுடன் இணைந்து பணியாற்றினார். இந்தக் கம்பங்களில் கொடியேற்ற வந்த கருணாநிதி ,அவற்றின் கீழே உள்ள கல்வெட்டுகளில் “கோரிமேடு இராமச்சந்திரன்” என்ற பெயரைப் பார்த்து அவரைப் பற்றி அறியும் ஆர்வம் கொண்டார். இறுதியில், இராமச்சந்திரன் கருணாநிதியையும் பின்னர் அவரது மகன் மு. க. ஸ்டாலினையும் சந்தித்தார்.[10]
கட்சிப் பதவிகள்
இதன்பின் சேலம் திரும்பிய இராமச்சந்திரன், திமுகவின் கிளைச் செயற்குழு உறுப்பினராகவும் கிளைச் செயலாளராகவும் தனது கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார்.[9] 1984-ஆம் ஆண்டு அப்போதைய சேலம் மாவட்ட திமுக ஒன்றியச் செயலாளரான ஏ. எல். தங்கவேல் பரிந்துரையின் பேரில் அப்போதைய சேலம் மாவட்டச் செயலாளரான வீரபாண்டி எஸ். ஆறுமுகம், இராமச்சந்திரனை சேலம் மாவட்டத்திற்கான கட்சியின் சார்பாளராக நியமித்தார். சில காலம் கழித்து அஸ்தம்பட்டி பகுதிக்கான பொருளாளராக ஆனார் இராமச்சந்திரன்.[10]
2012-ஆம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகம் இறப்பைத் தொடர்ந்து, அவருக்குப் பின் வந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் இரா. ராஜேந்திரன், இராமச்சந்திரனை அஸ்தம்பட்டி பகுதி செயலாளராக நியமித்தார். மேலும்,மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராகவும் ஆனார் இராமச்சந்திரன்.[10]
2022 உள்ளாட்சித் தேர்தல்
பிப்ரவரி 2022-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாநகராட்சியின் ஆறாம் கோட்டத்தில் போட்டியிட்ட இராமச்சந்திரன், தனக்கு அடுத்த போட்டியாளரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விஷ்ணு பார்த்திபனை 1,068 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[11] இதையடுத்து, மார்ச் 2 அன்று மாநகராட்சி உறுப்பினராகப் பதவியேற்றார். மறுநாள், திமுக தலைமை அவரை மறைமுகத் தேர்தலுக்கான நகரத்தந்தை வேட்பாளராக அறிவித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் வேறு யாரும் நகரத்தந்தை பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால், இராமச்சந்திரன் போட்டியின்றி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சேலத்தின் ஆறாம் நகரத்தந்தையாக மார்ச் 4 அன்று பதவியேற்றார். அவருடன் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர் எம். சாரதா தேவி (கோட்டம் 7) துணை மேயராகப் பதவியேற்றார்.[7]
Remove ads
நகரத்தந்தை பதவியில் (2022-)
நகரத்தந்தையாகப் பொறுப்பேற்றவுடன், தண்ணீர், வடிகால், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவேன் என்று கூறினார் இராமச்சந்திரன்.[7]
தனி வாழ்க்கை
இராமச்சந்திரனின் இணையர் மீனாட்சி ஆவார். இவர்களின் மகன் சுதர்சன் பாபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல மேலாளராக உள்ளார். மகள் சுமித்ரா, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.[9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads