ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயம் இலங்கையின் கீழை மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான ஆலயம்.
Remove ads
வரலாறு
சிராம்பியடி வழிபாடு
ஒத்தக்குடா கந்தன் என்பவர் தனது புத்திரி மற்றும் சகோதரிகளோடு யாழ்ப்பாணம் ஒத்துக்குடாவில் இருந்து மட்டக்களப்பு வாவி ஊடாக புதுக்குடியிருப்பு சிராம்பியடி என்ற இடத்தில் ஏழு கண்ணகை சிலைகளுடன் இறங்கியதாகவும். சிராம்பியடியில் கண்ணகை சிலைகளை வைத்து வழிபாடு ஆரம்பித்த வேளை. ஒத்தக்குடா கந்தனை பற்றிய தவறான தகவல்களால் கண்டி அரசன் ஒத்துக்குடா கந்தனை கொன்றுவிட்டு ஏழு கண்ணகை சிலைகளையும் ஏழு கிராமங்களுக்கு அனுப்பி வழிபட உத்தர விட்டதாகவும் அறிய முடிகின்றது.[1]
மண்முனை வழிபாடு
கண்டி மன்னனின் கட்டளைக்கமைய கண்ணகை சிலைகள் பல ஊர்களுக்கும் அனுப்பப்பட ஒத்துக்குடா கந்தனின் வழித்தோன்றல்கள் ஏழு சிலைகளில் ஒன்றை மண்முனையில் வைத்து சிராம்பி கட்டி வழிபட்டு வந்தனர்.[2] மண்முனையில் கண்ணகை வழிபாடு இடம்பெற்ற இடத்தில் 1980 களின் பின்னர் பத்திரகாளி அம்மன் கோவில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
ஆரையம்பதி வழிபாடு
ஆரையம்பதியில் களிமண்ணால் கந்தசுவாமி கோயில் தெற்கு வீதியில் கண்ணகை அ்ம்மன் வழிபாடு இருந்து வந்திருந்தது. இக்காலத்தில் மண்முனை கண்ணகை அம்மனின் உக்கிரம் அதிகரித்து அதை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதனால் மண்முனை அம்மனைப் பராமரித்துவந்த மூதாட்டி ஆரையம்பதியில் இருந்த கோயிலில் வைத்து வழிபடுவதற்காக கந்தசுவாமி கோயில் கணக்குபிள்ளையாக இருந்த சின்னதம்பி(1850 - 1914) அவர்களை அணுகி அம்மனை கொடுத்திருந்தார் சின்னத்தம்பியும் (சின்னஉபாத்தியார்) மண்முனை அம்மனை ஆரையம்பதி கண்ணகை அம்மன் கோயிலில் வைத்து வழிபட ஏற்பாடு செய்தார்.[3]
Remove ads
ஆலய அமைப்பு

ஆலயம் கந்தசுவாமி கோயிலின் தெற்கு வீதியில் வடக்கு நோக்கியதாக அமைக்கப்படடுள்ளது. கேரளப்பாணியில் அமைந்த ஓட்டு மடாலயமாகவே இவ்வாலயம் அமைந்து விளங்குகின்றது. 1912 இல் களிமணால் காணப்பட்ட கோயிலை கற்கள் கொண்டு கட்டிமுடிக்கப்பட்டிருக்கின்றது. ஆலய கூரையில் மூன்று கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன. வைரவர், நாகதம்பிரான், நரசிம்மர், வீரபத்திரர், இராமர், அனுமான் ஆகியோருக்கு பரிவார சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
Remove ads
வைகாசிச் சடங்கு[4]
வருடத்தில் வைகாசிமாத பூரணைக்கு முந்திய எட்டுநாட்கள் அதிகாலை, மாலை நேரங்களில் சடங்கு நடைபெற்று முடிவில் அம்மனின் கருவறைக்கதவுகள் அடுத்த வருட வைகாசி மாத சடங்கு வரைக்கும் பூட்டப்படும்
திருக்கதவு திறத்தல்
வைகாசி மாதத்தின் பூரணைக்கு 8 நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கருவறை கதவுகள் திறத்தலுடன் சடங்குகள் ஆரம்பமாகும்.
அம்மனை அழைத்து வருதல்
திருக்கதவு திறந்தவுடன் கந்தசுவாமி கோயிலில் தினப்பூசையில் இருக்கும் அம்மனை அழைத்து வந்து கருவறையில் எழுந்தருளப்பண்ணல் இடம்பெறும்.
திருக்கல்யாணச்சடங்கு
நான்காம் நாள் பிற்பகல் கல்யாணகால் வெட்டும் உற்சவம் நடைபெறும். பின்னிரவு கல்யாணகால் நாட்டி திருக்கல்யாண சடங்கு இடம்பெறும்.
கப்பல்காரர் சடங்கு
ஆறாம் நாள் அதிகாலை கப்பல்காரர் சடங்கு இடம்பெறும்
பச்சைகட்டிச்சடங்கு
ஏழாம்நாள் அதிகாலை பச்சைகட்டி சடங்கு இடம்பெறும்
திருக்குளிர்த்தி
எட்டாம் நான் அதிகாலை திருக்குளிர்த்தி சடங்கு நடைபெறும்
திருக்கதவடைத்தல்
எட்டாம் நாள் இரவு அம்மன் மீண்டும் கந்தசுவாமி ஆலயத்திற்கு அழைத்துசெல்லப்பட்டவுடன் கருவறை கதவு தாழிடப்படும்.
மரபுகள்
பத்ததி வழிபாடு
ஆகமம் சாராத கிராமிய முறைப்படி பூசை நியமங்களை கொண்ட பத்ததியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடு நடாத்தப்படும்.
பூசகர்
ஆகமம் சாராத பூசாரியே பூசைகளை நடாத்தும் கடமையுடையவராவார். ”பொன்னாச்சி குடி“ மரபினர் மாமன் அவரின் பின் மருமகன் என்ற அடிப்படையில் பூசை மேற்கொள்ளும் உரித்துடையவர்கள். பூசை மேற்கொள்ளும் பூசாரியை ”கட்டாடியார்” என அழைப்பார்கள்.
தெய்வமாடும் முறைமை
பக்தர்களுக்கு உருவந்து ஆடுதல், கட்டுச் சொல்லல் என்ற கிராமிய வழிபாடு இடம்பெறும்.
கோவலன் கதை படித்தல்
சடங்கு காலங்களில் கண்ணகியின் கதை கூறும் “கோவலன் கதை” படித்தல் இடம்பெறும்.
Remove ads
பேழை வழிபாடு
ஆலயத்தின் தோற்றம்
- மேற்குபக்கத் தோற்றம் (2008)
- பின்புறத் தோற்றம் (2008)
- பின்புறத் தோற்றம் (2008)
- தலவிருட்சம் (2008)
மேலும் காண்க
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads