ஆஸ்தோர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

ஆஸ்தோர் மாவட்டம்
Remove ads

ஆஸ்தோர் (ஆங்கிலம்: Astore ) ( Urdu: ضلع استور ) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் ஆஸ்தோர் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது (ஆஸ்தோர் நகரத்துடன்) மற்றும் மேற்கில் தயமர் மாவட்டமும் (2004 ஆம் ஆண்டில் இது பிரிக்கப்பட்டது), வடக்கே கில்கிட் மாவட்டமும், கிழக்கே ஸ்கர்டு மாவட்டமும் தெற்கே கைபர்-பக்துன்க்வா மற்றும் ஆசாத் காஷ்மீரின் நீலம் மாவட்டமும் இதன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. பாக்கித்தானின் 1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 71,666 ஆகும்.

Thumb
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தானில் ஆஸ்தோர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
Remove ads

பள்ளத்தாக்கு

Thumb
ஆஸ்தோருக்கு செல்லும் ஒரு வழி

ஆஸ்தோர் பள்ளத்தாக்கு 5,092 கிமீ² பரப்பளவையும், 2,600 மீட்டர் (8,500 அடி) உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கில் சுமார் 250 சதுர கிலோமீட்டர் (97 சதுர மைல்) பனிப்பாறை உறை உள்ளது. [1] பள்ளத்தாக்குக்குள் நுழைந்த பின் அருகிலுள்ள பனிப்பாறை ஹார்ச்சோ ஆகும். [2] மிகவும் எளிதில் அணுகக்கூடிய பனிப்பாறை சியாச்சின் ஆகும். [3]

அணுகல்தன்மை

ஆஸ்தோர் கில்கிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமாபாத்துடன் விமானம் மற்றும் இஸ்லாமாபாத் / ராவல்பிண்டி, ஸ்கர்டு மற்றும் சித்ரால் ஆகிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது தனது கடைசி எல்லையை இந்தியாவின் காஷ்மீருடன் இணைக்கிறது. வடமேற்கு ஆசாத் காஷ்மீருடன் இணைகிறது. கிழக்கில் அது ஸ்கர்டுவுடன் இணைகிறது. மேற்கில் அது சிலாசின் புறநகர்ப் பகுதிகளுடன் இணைகிறது. ஆஸ்தோரை அணுக இரண்டு வழிகள் உள்ளன. முதலில் ஸ்கர்டு நகரத்திலிருந்து தியோசாய் வழியாக 143 கிலோமீட்டர்கள் (89 mi) தூரம் உள்ளது . [4], ஆனால் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நவம்பர் முதல் சூன் வரை இதைப் பயன்படுத்த முடியாது. இரண்டாவது வழி, எல்லா பருவங்களுக்கும் கில்கித் நகரத்திலிருந்து ஜாக்லோட் வழியாக 128 கிலோமீட்டர்கள் (80 mi). [5]

Remove ads

வரலாறு

இந்திய இம்பீரியல் கெசட்டியரின்படி, சுமார் 1600:

காலநிலை

ஆஸ்தோர் பள்ளத்தாக்கு கோடையில் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் இது முக்கிய பள்ளத்தாக்குகளில் 6 அங்குலங்கள் (15 செ.மீ) வரை மற்றும் மலைகளில் 2-3 அடி (60-90 செ.மீ) வரை பனிமூடியிருக்கும். மிர்மாலிக் பள்ளத்தாக்கில் இது பிப்ரவரியில் 6 அடி (1.8 மீ) வரை இருக்கும்.

மொழிகள்

பள்ளத்தாக்கில் பேசப்படும் முக்கிய மொழி சினா மொழியாகும். பாக்கித்தானின் தேசிய மொழியான உருது, அடிக்கடி பேசப்படும் இரண்டாவது மொழியாகும். இப்பகுதியில் சினாவின் வெவ்வேறு பேச்சுவழக்கு பேசப்படுகிறது. கோடை மாதங்களில் மிதமான சுற்றுலாப் போக்குவரத்தின் வரலாறு அஸ்தோருக்கு இருப்பதால், உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் தாராசிங் அல்லது ஆஸ்தோரில் உள்ள காவலர்கள் மற்றும் பயண வழிகாட்டிகள் சிலர் ஆங்கிலம் பேசலாம்.

கல்வி

அலிப் சலான் பாக்கித்தான் மாவட்ட கல்வி தரவரிசை 2015 இன் படி, ஆஸ்தோர் கல்வி அடிப்படையில் 148 மாவட்டங்களில் 32 வது இடத்தில் உள்ளது. வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பிற்காக, மாவட்டம் 148 இல் 114 வது இடத்திலும், பாக்கித்தானின் முதல் பெண் ஆளுநர் (கில்கிட்-பால்டிஸ்தான்) முனைவர் சாமா காலித் ஆஸ்தோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் [7]

ஆர்வமுள்ள இடங்கள்

உலகின் 9 ஆவது மிக உயர்ந்த சிகரமான நங்க பர்வதத்தின் மிகப்பெரிய தளத்தை ஒட்டி ஆஸ்தோர் உள்ளது. நங்க பர்வதத்தின் மலைமுகட்டின் தெற்கே இராமா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் இது இராமா ஏரியின் தாயகமாக உள்ளது. இது பாக்கித்தான் அரசாங்கத்தால் கட்டப்பட்ட பாக்கித்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியைக் கொண்டுள்ளது. ஆஸ்தோர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஒரு தனித்துவமான பகுதியாகும். இது தூர மேற்கு இமயமலையின் உயரமான சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. இரண்டு நதி சந்திப்புக்கு அருகிலுள்ள இலௌஸ் கிராமம் ஆப்பிள், பாதாமி, செர்ரி மற்றும் பிற பழங்களுக்கு குறிப்பாக காட்டு பாதாம் எண்ணெய்க்கு பிரபலமானது. சுமார் 95 சதவீத கல்வியறிவு விகிதத்துடன் கூடிய ஒரு சிறிய கிராமத்தை இலௌஸ் கொண்டுள்ளது. 1987 முதல் முழு மாவட்ட தோராயமாக 1000 கிலோவாட் வரை மின்சாரம் வழங்குவதற்கான ஒரு மிகப்பெரிய மின்நிலையம் அமைந்துள்ளது. இலௌஸ் அருகிலுள்ள சிகரங்களில் நங்க பர்வதம், சைகிரி, உரூபல் சிகரம், சோங்ரா சிகரம் மற்றும் இலைலா சிகரம் ( உரூபல் பள்ளத்தாக்கு) ஆகியவை அடங்கும். பாக்கித்தானின் ஜாக்லோட் அருகே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து அஸ்தோர் பள்ளத்தாக்கு ஏறுகிறது

தியோசாய் சமவெளிகள் இமயமலையில் மிக உயர்ந்த பீடபூமியாகும். மேலும் கிண்ண வடிவிலான ஏரி, காட்டு பூக்கள் மற்றும் பழுப்பு நிற கரடியின் வாழ்விடங்களுடன் மிகவும் அழகாக இருக்கின்றன. ஆஸ்தோரிலிருந்து எளிதான பாதை, கோரிகோட், (டார்சே சுல்தான் அபாத்) குடாய், சிலம் வழியாக எளிதில் அணுகலாம். பின்னர் ஒரு பாதையானது இந்த பகுதிக்கு சிறிய செங்குத்தான உயர்வுடன் செல்கிறது. இது ஒரு இயற்கை பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்க ஒரு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

உரூபால் பள்ளத்தாக்கு ஆஸ்தோர் பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது கொலையாளி மலையான (8126 மீ) நங்க பர்வதத்தின் பர்பத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. மேலும், ரூபால் நதி என்று பெயரிடப்பட்ட நங்க பர்வத பனிப்பாறையில் இருந்து ஒரு பெரிய அளவு தண்ணீர் தரிசிங் வழியாகச் சென்று இரகுமான்பூரில் நாலா ரட்டுடன் சந்திக்கிறது. பின்னர் அது கிழக்கு நோக்கி பாய்ந்து கோரிகோட்டின் தொடக்க இடத்தில் நாலா குடாயைச் சந்தித்து ஆஸ்தோர் பள்ளத்தாக்கின் முக்கிய நதியாக மாறுகிறது. இந்த நதி ஆஸ்தோர் பள்ளத்தாக்கின் கிராமங்களில் ஒன்றான புஞ்சியில் சிந்து நதியில் விழுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads