இங்கிள்வுட், கலிபோர்னியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கிள்வுட் (Inglewood), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தின் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தின் ஒரு பகுதியாகும். இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு தென்மேற்கே 25.7 மைல் தொலைவில் உள்ளது. இங்கிள்வுட நகரத்திற்கு தென்கிழக்கே 3.6 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. இவ்வூரில் கால்பந்து விளையாட்டு போன்ற தொழில்முறை விளையாட்டு அணிகள் அதிகம் உள்ளது. 2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இங்கிள்வுட் நகர மக்கள் தொகை 1,07,762 ஆகும்.
Remove ads
சிறப்பு
இங்கிள்வுட் நகர்புறத்தில் உள்ள சோபி உள்விளையாட்டரங்கத்தில் சூலை 2028ஆம் ஆண்டில் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா, நிறைவு விழா மற்றும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
மக்கள் தொகை வளர்ச்சி
- 1910= 1536
- 1920= 3286
- 1930= 19480
- 1940= 30114
- 1950= 46185
- 1960= 63390
- 1970= 89985
- 1980= 94162
- 1990= 109602
- 2000= 112580
- 2010= 109673
- 2020= 107762
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு
2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இங்கிள்வுட் நகரத்தின் மக்கள் தொகை 107,762 ஆகும். மக்கள்தொகை அடர்த்தி 11,885.1 inhabitants per square mile (4,588.9/km2) ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் இனக்குழுவினர் கீழ்கண்டவாறு உள்ளனர்.
- அமெரிக்க வெள்ளையர்கள் 9.5%
- ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் 38.7%
- பூர்வகுடி அமெரிக்கர்கள் 2.0%
- ஆசிய-அமெரிக்கர்கள் 2.1%
- பசிபிக் பெருங்கடல் தீவுவாசிகள் 0.3%
- அமெரிக்க வாழ் பிற இனத்தவர்கள் 33.9%
- இரண்டுக்கும் மேற்பட்ட கலப்பினத்தவர்கள் 13.4%
- எசுப்பானியா மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள் 51.7%[6]
இதன் மக்கள் தொகையில் 99.2% பேர் குடியிருப்புகளில் வாழ்கின்றனர். 0.4% மக்கள் நிறுவனப்படுத்தப்படாத இடங்களிலும், 0.5% மக்கள் நிறுவனப்படுத்தப்பட்ட இடங்களில் வாழ்கின்றனர்.
37,853 குடியிருப்புகள் கொண்ட இங்கிள்வுட் நகரத்தில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 32.3% ஆக உள்ளனர்.
வீடற்றவர்கள்
2022ஆம் ஆண்டில் இங்கிள்வுட் நகரம் உள்ளிட்ட லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தில் 751 தனிநபர்கள் வீட்டற்றவர்களாக உள்ளனர்.[7]
தட்ப வெப்பம்
Remove ads
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1984 ஒலிம்பிக்கில் ஆடவர் அணி கூடைப்பந்தாட்டம் மற்றும் கைப்பந்தாட்டம் இறுதிப் போட்டிகள் இந்நகரத்தில் நடைபெற்றது.[10]2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்நகரத்தின் சோபி விளையாட்டு அரங்கத்தில் சூலை மாதம், 2028ஆம் ஆண்டில் துவக்க விழா மற்றும் நிறைவு விழா மற்றும் உள் அரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.[11]
நிர்வாகம்
இங்கிள்வுட் நகராட்சி மன்றக் குழுவினர், மேயர், துணை மேயர் மற்றும் மேலாளர் இந்நகரத்தின் நிர்வாகத்தை மேற்கொள்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads