இலித்தியம் குளோரைடு

From Wikipedia, the free encyclopedia

இலித்தியம் குளோரைடு
Remove ads

இலித்தியம் குளோரைடு (Lithium chloride) என்பது LiCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு ஒரு பொதுவான அயனிச் சேர்மமாகும். இருப்பினும், இலித்தியம் நேர்மின் அயனியின் சிறிய அளவு மற்ற கார உலோகக் குளோரைடுகளுக்குக் காணப்படாத பண்புகளுக்கு (முனைவுற்ற கரைப்பான்களில் அசாதாரணமான கரைதிறன் (g/100 mL நீர் 20°C இல்) மற்றும் அதன் நீர் உறிஞ்சும் திறன் சார்ந்த பண்புகள்) காரணமாக அமைகிறது.[5]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

வேதியியல் பண்புகள்

Thumb
இலித்தியம் குளோரைடு சூடாக்கப்படும் போது உருவாகும் நிறம்.

மற்ற கார உலோக குளோரைடுகளைப் போலல்லாமல், இந்த உப்பு படிக ஐதரேட்டுகளை உருவாக்குகிறது.[6] இந்த உப்பில் ஒற்றை, மூ மற்றும் ஐ பென்டாஐதரேட்டுகள் அறியப்படுகின்றன.[7] ஐதரேட்டுகளை வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற உப்பை மீண்டும் உருவாக்க முடியும். LiCl மோல் ஒன்றிற்கு நான்கு சமான அம்மோனியா வரை உறிஞ்சுகிறது. மற்ற எந்த அயனி குளோரைடையும் போலவே, இலித்தியம் குளோரைடு கரைசல்களும் குளோரைடு அயனிக்கான மூலமாக செயல்பட முடியும், எடுத்துக்காட்டாக, இச்சேர்மத்துடன் வெள்ளி நைட்ரேட்டைச் சேர்க்கும்போது ஒரு வீழ்படிவை உருவாக்குகிறது.

LiCl + AgNO3 → AgCl + LiNO3
Remove ads

தயாரிப்பு

இலித்தியம் கார்பனேட்டை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் லித்தியம் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது .[5] இலித்திம் ஐதரேட்டை ஐதரசன் குளோரைடு வாயுவின் பாய்ச்சலின் ஊடே அனுப்பி வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற இலித்தியம் குளோரைடானது உருவாக்கப்படுகிறது.

பயன்பாடுகள்

வணிக பயன்பாடுகள்

முக்கியமாக, இலித்தியம் குளோரைடானது, இதை 450 °C (842 °F) வெப்பநிலையில் LiCl/KCl உருக்கி மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் இலித்தியம் உலோகத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. வாகன பாகங்களில் அலுமினியத்திற்கான வன்பற்றாசுவைத்திணைத்தற்பாயமாக LiCl பயன்படுத்தப்படுகிறது. இது காற்றோட்டங்களை உலர்த்துவதற்கு ஒரு உலர்த்தியாக பயன்படுத்தப்படுகிறது . மேலும் சிறப்பு பயன்பாடுகளில், இலித்தியம் குளோரைடு கரிமத் தொகுப்பு முறை தயாரிப்புகளில் சில பயன்பாடுகளைக் காண்கிறது, எடுத்துக்காட்டாக, ஸ்டில் வேதிவினையில் இது ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உயிர்வேதியியல் பயன்பாடுகளில், செல்லிலிருந்து பெறப்படும் சாறுகளிலிருந்து ஆர். என். ஏவை வீழ்படிவு செய்ய இது பயன்படுத்தப்படலாம்.[8]

அடர் சிவப்பு தீப்பிழம்புகளை உருவாக்க இலித்தியம் குளோரைடு ஒரு சுடர் வண்ணமாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கைகள்

இலித்தியம் உப்புகள் மத்திய நரம்பு மண்டலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன. சிட்ரேட்டு, கார்பனேட்டு மற்றும் ஓரோடேட்டு உப்புகள் தற்போது இருமுனையப் பிறழ்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, குளோரைடு உள்ளிட்ட பிற லித்தியம் உப்புகள் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1940களில் சிறிது காலத்திற்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு மாற்றாக லித்தியம் குளோரைடு தயாரிக்கப்பட்டது, ஆனால் கலவையின் நச்சு விளைவுகள் (நடுக்கம், சோர்வு, குமட்டல்) அடையாளம் காணப்பட்ட பின்னர் இது தடை செய்யப்பட்டது.[9][10]

இருப்பினும், லித்தியம் குளோரைடு நச்சுத்தன்மைக்கு காரணமாகக் கூறப்படும் பல அறிகுறிகள், சோடியம் குளோரைடு பற்றாக்குறையாலோ, லித்தியம் குளோரைடு கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி நிர்வகிக்கப்படும் சிறுநீர் பெருக்கிகளாலோ, அல்லது நோயாளிகளின் அடிப்படை நிலைமைகள் ஆகியவற்றாலோ ஏற்பட்டிருக்கலாம் என்று ஜே. எச். டால்பாட் குறிப்பிட்டார்.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads