ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம்map
Remove ads

ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Jalan Ipoh MRT station; மலாய்: Stesen MRT Jalan Ipoh) என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட், தாமான் காயா, ஈப்போ சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் PY15 ஈப்போ சாலை, பொது தகவல்கள் ...

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 16 மார்ச் 2023 அன்று திறக்கப்பட்டது.  KC02  கன்டோன்மன் எம்ஆர்டி நிலையம் நிலையத்திற்கும்;  PY16  செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு  PY15  ஆகும்.[1] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலலம்மால் இந்த நிலையம், பகுதி நிலத்தடி அமைப்பைக் கொண்டது.

Remove ads

வரலாறு

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) இந்த ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அதன் பின்னர் இந்த  PY15  ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் பகுதி நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.

ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[2][3] அதற்கு முன்னர்,  PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY13  கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்கள் 16 சூன் 2022-இல் செயல்படத் தொடங்கின.

Remove ads

நிலைய அமைவு

இந்த நிலையம் ஈப்போ சாலையில், முத்தியாரா வணிக வளாகத்தின் (Mutiara Complex Mall) எதிர்த் திசையில் அமைந்துள்ளது. இது மலேசியாவில் பாதி மூழ்கிய (பாதி நிலத்தடி) நிலையங்களில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த நிலையம் தரை மட்டத்திலிருந்து சற்று கீழே தரையில் கட்டப்பட்டு உள்ளது.

சோங் குவா தனியார் உயர்நிலைப் பள்ளி (Chong Hwa Independent High School);[4] லாய் சி சீனப்பள்ளி (SJK (C) Lai Chee), மற்றும் ஈப்போ சாலை பெண்கள் உயர்நிலைப்பள்ளி (SMK (P) Jalan Ipoh) போன்ற பள்ளிகள் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளன. இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகங்களில் சாங் சூரியா காண்டோமினியம் (Sang Suria Condominium), தி மேப்பிள் (The Maple) மற்றும் தி பனோ (The Pano) ஆகியவை அடங்கும்.

Remove ads

நிலைய அமைவிடம்

இந்த நிலையத்தில் 3 நுழைவாயில்கள் உள்ளன. நுழைவாயில் A முத்தியாரா வணிக வளாகத்திற்கு மிக அருகில் உள்ளது. நுழைவாயில் B தாமான் காயா குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் சாலையின் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது. அதே கட்டத்தில் நுழைவாயில் C நிலையத்திலிருந்து பேருந்து நிறுத்தம் மற்றும் வாடகை வாகனங்கள் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது.

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், அமைவிடம் ...
Remove ads

காட்சியகம்

ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads