எண்ணூர் அனல் மின் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்ணூர் அனல்மின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு நிலக்கீல் கரி அனல் மின் நிலையம் ஆகும்.
Remove ads
வரலாறு
எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவாட்டு ஆகும்.[1] இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.[2][3] எனினும், 1000 மெகாவாட்டு திறன் உலையின் கட்டுமான பணிகள் 2007இல் தொடங்கின.[4][5][6] இந்நிலையத்தில் தற்போது இரண்டு 60 மெகாவாட் உலையும் மூன்று 110 மெகாவாட் உலையும் அமைந்துள்ளன. கூடுதலாக 500 மெகாவாட் உற்பத்தி உலை நிறுவ பரிந்துரைக்கபட்டு கட்டுமான பணிகள் தொடங்கபட்டன.[7] இந்நிலையத்தின் மொத்த மதிப்பு 270 கோடி ரூபாய் ஆகும்.
Remove ads
அம்சங்கள்
மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நிலையமாக திகழும் இதன் உற்பத்தி திறன் அண்மைய ஆண்டுகளில் மேம்படுத்தபட்டுள்ளது.[8] தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது.[1][9] மேலும், கழிவுகளை சுத்திகரித்து முறையாக வெளியேற்ற சிறப்பு அமைப்புக்களை கொண்டுள்ளது.[10]
இயக்கத்திற்கு தேவையான நிலக்கரி MCL (தல்கர் மற்றும் எல்பி பள்ளத்தாக்கு), ஒரிசா மற்றும் ECL, ரணிகஞ்சு , மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகிறது. 2008–2009 ஆண்டின் கொள்திறன் காரணி (plant load factor) 49.17 சதவிகிதம் ஆகும்.[11]
உற்பத்தி திறன்
Remove ads
மேம்பாடுகள்
எண்ணூர் மின் நிலையத்தில் மேம்படுத்தல் நடைபெறுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.[12][13] இந்த புதிய திட்டம் அண்மைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்நிலையத்தின் உற்பத்தியை பெருக்க வடிவமைக்கபட்டது. இத்திட்டத்தில் நுட்ப நடைமுறைபடுத்தல் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[14] எனினும் அண்மைய வருடங்களில் தமிழ்நாட்டில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையால், இந்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தபடுகிறது.[15]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
