எஸ். ஏ. சந்திரசேகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். ஏ. சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் சமூகப் பின்னணியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
சந்திரசேகர் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகில் முத்துப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சேனாதிபதிபிள்ளை, இராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தொடருந்துத் துறையில் பணிபுரிந்தார். ஒரு வசதி வாய்ந்த கிறித்தவ வேளாளர் பிள்ளை குடும்பத்தில் பிறந்தார்.[3] பின்னாளில் கருநாடக இசைப் பாடகியான சோபாவை மணமுடித்தார்.[4] கோலிவுட்டின் தற்போதைய தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தையாவார்.[5] சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜயை ஒரு முழுமையான கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இவருக்கு நடிகர் விஜய்க்கு பிறகு, இரண்டாவதாக வித்யா என்ற மகள் 2 வயதிலேயே உயிரிழந்தார்.[6]
Remove ads
திரைப்பட வாழ்க்கை
சந்திரசேகர் அரசாங்க தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று சென்னையில் அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவருக்கு திரைத்துறையில் தனது பங்களிப்பை செலுத்தும் விதமாக விஜயா வாஹினி ஸ்டூடியோவில் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் சவுண்ட் இன்ஜினியராக தனது திரை வாழ்வை ஆரம்பித்தார். அதன் பிறகு இயக்குநர் டி. என். பாலுவிடம் உதவி இயக்குநராக அவரது படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். எங்க வீட்டு பிள்ளை, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, அஞ்சல் பெட்டி 520, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, திருமாங்கல்யம், உத்தமன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு 1980கள் முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். இதைவிட 1980களில் இயக்குநர் சந்திரசேகர்–மு. கருணாநிதி கதை, வசனத்தில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் 80களில் இயக்குநர் சந்திரசேகர்–விஜயகாந்த் இணையில் பல அரசியல் கருத்து தெறிக்கு திரைப்படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றள்ளது. பின்பு விஜயகாந்த் அவர்களை வைத்து அதிகமான திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அதே சமயத்தில் ரஜினிகாந்தை வைத்து நான் சிவப்பு மனிதன் என்ற ஒரே திரைப்படத்தை மட்டுமே இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்களில் இவர் சிறப்புக் கௌரவத் தோற்றங்களிலும் நடித்துள்ளார்.[7] மேலும் 90களின் பெரும் இயக்குநர்களான எஸ். சங்கர், ஏ. வெங்கடேஷ் எம். ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குநர்கள் இவரிடம் துணை இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.[8][9] மேலும் இவர் இயக்கிய டூரிங் டாக்கிஸ் (2015)[10] திரைப்படம் சந்திரசேகர் இயக்கிய 69 ஆவது படமாகும்
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads