ஒன்பதாம் ராமேசஸ்

20 வது வம்சத்தின் எகிப்திய பாரோ From Wikipedia, the free encyclopedia

ஒன்பதாம் ராமேசஸ்
Remove ads

ஒன்பதாம் ராமேசஸ் (Ramesses IX) (ஆட்சிக் காலம்:கிமு 1129 – கிமு 1111)[1] புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் எட்டாம் பார்வோன் ஆவார். இருபதாம் வம்சத்தவர்களில் பண்டைய எகிப்தை நீண்ட காலம் ஆண்ட மூன்றாம் ராமேசஸ் மற்றும் பதினொன்றாம் ராமேசஸ் ஆகியவர்களுக்கு அடுத்து ஒன்பதாம் ராமேசஸ் 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [2][3]

விரைவான உண்மைகள் ஒன்பதாம் ராமேசஸ், எகிப்தின் பாரோ ...

துரின் மன்னர்கள் பட்டியல் படி, பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை 18 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆட்சி செய்தார் எனக்கூறுகிறது[4][5]

இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன் எனக்கருதப்படுகிறார்.[6][7]பாபிரஸ் குற்ப்புகளின் படி, ஒன்பதாம் ராமேசேசின் கல்லறை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறுகிறது. 1881-ஆம் ஆண்டில் ஒன்பதாம் ராமேசேசின் மம்மி தேர் எல் பகாரி தொல்லியல் களத்தில் ஒரு கல் சவப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

Remove ads

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [9]

Thumb
கர்னாக் கல்லறைக் கோயிலில் ஒன்பதாம் ராமேசேசின் சிற்பம்
Thumb
ஒன்பதாம் ராமேசேசின் கல்லறையின் உள்தோற்றம்
Thumb
எகிப்திய அருங்காட்சியகத்தில் ஒன்பதாம் ராமேசேசின் சிற்பம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads