கண்ணம்மா (2005 திரைப்படம்)

2005 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்ணம்மா (Kannamma) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். எஸ். பாபா விக்ரம் இயக்கிய இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் மீனா நடிக்க, பிரேம் குமார், போஸ் வெங்கட் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் லட்சுமி சௌபாக்யவதி என்று பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1] இப்படத்தின் திரைக்கதையை மு. கருணாநிதி எழுதினார்.[2][3]

விரைவான உண்மைகள் கண்ணம்மா, இயக்கம் ...
Remove ads

கதை

கண்ணம்மா ( மீனா ) என்பவள் ஒரு பணக்கார மருத்துவ மாணவி. அவளது ஓட்டுநர் பாபு ( கராத்தே ராஜா ) நடத்தும் அமில வீச்சு தாக்குதலில் இருந்து அவளை ஆனந்தன் (பிரேம் குமார்) காப்பாற்றுகிறான். இதன் பிறகு ஆனந்தனை கண்ணம்மா காதலிக்கிறாள். அதன்பிறகு இருவர் வாழ்விலும் ஏற்படும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதில் இருந்து எவ்வாறு மீண்டனர் என்பதே கதையின் முடிவாகும்.

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...

இசை

இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். பாடல்களை ஸ்டார் மியூசிக் வெளியிட்டது.[4]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...

வரவேற்பு

ரெடிஃப் எழுதியது, "2005 ஆம் ஆண்டில், அதாவது இன்றைக்கு திரைப்படங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பது குறித்து இயக்குநர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை என்பது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த படம் 1960 களின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கலாம் ".[5] திரைப்படம் குறித்து பாலாஜி பி எழுதியது "இது ஒரு அரசியல் நையாண்டி அல்ல, கதாநாயகியின் பெயரை படத்தின் பெயராக வைத்திருந்தாலும், சமூக ரீதியாக பொருத்தமான படம். அவரது [கருணாநிதி] உரையாடல்கள் சில இடங்களில் பிரகாசிக்கின்றன, ஆனால் பெரும்பாலானவை, கொடூரமான திரைக்கதை, மோசமான பாத்திரப் படைப்பால் பொருத்தமற்றுள்ளது. " [6] இண்டியாகிளிட்ஸ் எழுதியது "படம் தேசியம், சாதி, வகுப்புகளிடையே நல்லிணக்கம் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது சில பிழைகளினால் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. " [7]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads