கண்ணம்மாபேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணம்மாபேட்டை என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] இங்கு மயானம் ஒன்று உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் இந்த மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. முக்கிய நபர்கள் இறந்த பிறகு இந்த மயானத்தில் தகனம் செய்யப்படுவதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2][3] பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் இம்மயானம் அமைந்துள்ளது.[4] மின்சார தகன மேடை வசதி கொண்டதாக இம்மயானம் உள்ளது.[5]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.02 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள கண்ணம்மாபேட்டையின் புவியியல் ஆள்கூறுகள், (13.0321°N 80.2283°E) ஆகும்.
அரசியல்
கண்ணம்மாபேட்டை பகுதியானது, தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads