கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில் (ஆங்கிலம்: Tirupati Venkateswara temple in Kanyakumari)[3][4][5] என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி புறநகர்ப் பகுதியில், கன்னியாகுமரி கடலோரமாக கட்டப்பட்டுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் கோயில்களைக் கட்டி வருகிறது.
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரம், தனது வளாகத்தின் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூபாய் 22.5 கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கட்ட 13 சூலை 2013 அன்று கட்டுமானப்பணி துவக்கியது.
இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட இக்கோயிலில் மேல்தளத்தில் மூலவர் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கீழ் தளத்தில் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்புகள், சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.[6][7][8][9][10][11]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads