கபிசா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கபிசா மாகாணம்map
Remove ads

கபிசா  (Kapisa (பஷ்தூ/பாரசீகம்: کاپيسا) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கபிசாவின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கு இல்லை என்றாலும் கபிசாவின் மக்கள் தொகை 364,900 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாணமானது 1,842 கி.மீ.² பரப்பளவைக் கொண்டு நாட்டின் மிகச் சிறிய மாகாணமாக உள்ளது. இருப்பினும் இது காபுல் மாகாணத்தைப் போன்று மிகவும் மக்கள் அடர்த்தி நிறைந்த ஒரு மாகாணமாகும்.[2] மாகாணத்தின் தலைநகராக மஹ்மூத்-இ-ராக்கி உள்ளது. கபிசா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும், மாவட்டமும் நைஜிர்ப் நகராகும்.

விரைவான உண்மைகள் கபிசா Kapisa کاپیسا, நாடு ...
Remove ads

வரலாறு

Thumb
கி.பி 565 இல் ஆசியாவில் ஷாஹி இராச்யங்களையும் அண்டை நாடுகளையும் காட்டும் வரைபடம்.

கி.மு ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய அறிஞர் பாணினி எழுதியவற்றில் கபீசா குறித்து பழங் குறிப்புகள் காணப்படுகின்றன. கபிசா இராச்சியத்தின் நகரான கப்சிசி,[3] (தற்கால பாக்ராம் [4]) நகரத்தைப் பற்றி பாணினி குறிப்பிட்டுள்ளார். கபிசாவின் புகழ்பெற்ற மதுவகையான கப்சயயனா பற்றியும் பாணினி குறிப்பிட்டுள்ளார்.[5] [6] [7]

1939 ஆம் ஆண்டில் நடந்த தொல்லியல் ஆராய்வுகளில் கபிசா நகரம் கப்சாயாயண மதுவிற்கு ஒரு பேரங்காடியாக இருந்துள்ளதை உறுதிசெய்யும் வகையில், பல கண்ணாடிக் குடுவைகள், மீன் வடிவிலான மது ஜாடிகளை அக்காலத்திய மது வர்த்தகத்தையும், இயல்பான குடிப்பழக்கம் போன்றவற்றைக் காட்டுவதாக கிடைத்த‍து.[8] இப்பகுதியில் இருந்த திராட்சை (கப்சாயாணி திராட்சை) மற்றும் மது (கப்சாயாணி மது) போன்றவை குறித்து பண்டைய இந்திய இலக்கியங்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.[9] நகரத்தில் இருந்த அடிமைத்தனத்தின் பொதுவான நடைமுறையையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.[10]

கி.பி. 644இல் வந்த சீனப் பயணி சுவான்சாங் குறிப்புகளின்படி, லம்பகா, நாகர்ஹாரா, காந்தாரம், பானு உட்பட பத்து அண்டை அரசுகளை ஆண்ட பௌத்த சத்திரிய மன்னரின் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கபீசா இருந்தத‍து தெரியவருகிறது.[11] மேலும் யுவான்சுவாங்கின் குறிப்புகளில் இப்பகுதியில் இருந்த ஷேன் இனக் குதிரைகள் பற்றியும், இங்கு விளையும் பல வகை தானியங்கள் மற்றும் பழங்களின் உற்பத்தி பற்றியும், இங்கு உள்ள யூ-கின் என்ற வாசனை திரவியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மௌரியப் பேரரசின் ஆட்சியின் கீழ் கபிசா மாகாணம்

கபிசா மாகாணப் பிரதேசமானது சந்திரகுப்த மௌரியரின் தலைமையிலான மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. மௌரியர்கள் இப்பகுதியில் இந்து மற்றும் பௌத்தத்த சமயங்களை அறிமுகப்படுத்தினர், மேலும் மத்திய ஆசியாவில் இன்னும் பல பிரதேசங்களை உள்ளூர் பாக்டிரியன் படைகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கத்துடன் திட்டமிட்டு இருந்தனர். இதனால் செலியூஷியா சந்திரகுப்த மௌரியருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்துகுஷ் மலைகளுக்கு தெற்குப் பிரதேசத்தை மௌரியர்கள் கட்டுப்பாட்டில் விடுத்து, 500 யானைகளை பரிசாக அளித்தான். 

Thumb
அசோகர் ஆட்சியில் மௌரியப் பேரரசு
Thumb
ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் மெஸ் ஐநாக் பகுதியில் புதியதாக அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்ட பௌத்த தாது கோபத்தின் இடிபாடு. இதேபோன்ற தாது கோபங்கள் அருகிலுள்ள கஜினி மாகாணம், சமங்கன் மாகாணம் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

வடமேற்கில் தங்களை வலுப்படுத்திக் கொண்ட, சந்திரகுப்தர் நந்த பேரரசை கிழக்கு நோக்கி நகர்த்தினார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பண்டைய புத்த மத பாரம்பரிய மற்றும் கலை மிச்சங்கள் பரந்த அளவிலான தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் கௌதம புத்தர் (கி.மு 563 முதல் 483) தன் வாழ்நாளில் பால்க் பகுதிக்கு வரவில்லை என, தன் பதிவுகளில் கூறுகிறார் சுவான்சாங்.

ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே, கபிசாவின் பல வரலாற்றுத் தளங்கள் கடத்தல்காரர்களால் சூறையாடப்பட்டு பின்னர், அவை வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டன. 2009 மற்றும் 2010இல் இருபத்தி ஏழு நினைவுச்சின்னங்கள் தேசிய பாதுகாப்பு படைகளால் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கி.மு. 2 மற்றும் கி.மு 4  ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலும் கோஹிஸ்தான் மாவட்டத்தில் இருந்த பண்டைய நினைவுச்சின்னங்கள் அடங்கும்.[12] இப்பிரதேசம் குறிப்பாக கில்ஜி வம்சத்தின் காலத்தில் தில்லி சுல்தானகப் பகுதியாக இருந்தது.

Remove ads

நிலவியல்

கபிசா மாகாணம் காபூலின் வட கிழக்கில் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலைப் பகுதிகள் துப்பாக்கிதாரிகளின் இருப்பிடமாக பல நூற்றாண்டுகள் இருந்தது. இந்த மலைப்பகுதியின் குறுகிய மலைப்பாதையின்வழியாக பயணிக்கும் பயணிகள் இவர்களுக்கு இரையாயினர். மேலும் படையெடுப்பாளர்களுக்கும்இந்த குறுகிய மலைப்பாதைகள் இடஞ்சல் தருவதாக இருந்தது. இதன் எல்லைகளாக வடக்கில் பாஞ்ச்சிர் மாகாணமும், கிழக்கில் லக்மான் மாகாணமும், தெற்கில் காபுல் மாகாணமும், தென்மேற்கில் பர்வான் மாகாணம் அமைந்துள்ளன. மாகாணமானது 1,842 கி.மீ.²; பரப்பளவைக் கொண்டுள்ளதாக உள்ளது. இதுவே ஆப்கானிஸ்தானின் மிகச் சிறிய மாகாணமாகும். கபிர் மாகாணத்தின் நிலப்பரப்பானது உயர்ந்த சிகரங்கள், மலைப்பாங்கான ஆற்றுப்பள்ளத்தாக்குகள், ஆழமற்ற மத்திய சமவெளிகள் போன்றவற்றின் கலவையாக உள்ளது. மாகாணத்தின் மிக உயர்ந்த நிலப்பகுதிகள் கிழக்கில், பாஞ்ச்சிர் மற்றும் லக்மான் மாகாணம் மாகாணங்களின் எல்லைகளில் உள்ளன. இந்த மாகாணமானது பல படையெடுப்புகளுக்கு காலம் காலமாக ஆளாகி வந்த‍து. அண்மைக்கால வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியராலும், 20 ஆம் நூற்றாண்டில் உருசியர்களாலும், இப்போது நேட்டோ கூட்டணிப் படைகளாலும் என பல படையெடுப்பாளர்களால் மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது.

Thumb
ஆப்கானிஸ்தானின் கபிசியா மாகாணத்தின் டாகாப் மாவட்டத்தில்.
Remove ads

அரசியல் மற்றும் பாதுகாப்பு

Thumb
கஸ்பாவில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில், ஏஎன்பி காவல் துறையின் உதவியுடன் குடிமக்களுக்கான ஒரு மருத்துவ உதவித் திட்டத்திற்கான ஏற்பாடு.

மாகாணத்தில் உள்ள கொஹிஸ்தான், மஹ்முட் ரக்கி, கோஹ்பான்ட் போன்ற மாவட்டங்கள் அனைத்தும் ஜாமியாட்-இ இஸ்லாமி போன்ற கிட்டத்தட்ட அனைத்து தாஜிக், கிளர்ச்சிக் குழுக்களின் நடமாட்டமுள்ள  வட்டாரங்களாக உள்ளன. இப்பகுதியானது காபூலுக்கு நெருக்கமான இடத்தில் இருப்பதால், காபூலில் தாக்குதல்களை நடத்துபவர்கள் இங்கு தாக்குகிறார்கள். 

நலவாழ்வு பராமரிப்பு

பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையானது 2005இல் 27% ஆக இருந்த நிலையில், 2011இல் இது 15% ஆக வீழ்ச்சியடைந்தது.[13] 2005இல் நிகழ்ந்த பிரசவங்களில் 12% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது. இது 2011இல் 7% ஆக குறைந்துள்ளது.

கல்வி

ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+) 2005இல் 39% ஆக இருந்து, 2011 இல் 31% என குறைந்துள்ளது.

மாவட்டங்கள்

Thumb
கபிசா மாகாண மாவட்டங்கள்
மேலதிகத் தகவல்கள் மாவட்டம், மாவட்ட தலைநகரம் ...
Remove ads

மக்கள்வகைப்பாடு

Thumb
ஒரு பாசாய் சிறுமி, தனித்தன்மையான நிறத்திலான உருப்படிவ ஆடையை அணிந்துள்ளார்

மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 406,200 ஆகும்.[15] மக்கட்தொகையில் ஏறக்குறைய 70 விழுக்காடோடு பெரும்பான்மையினராக தாஜிக் மக்கள் உள்ளனர். மேலும் பஷ்தூன் (சைபிஸ் உள்ளிட்டு) (18%), பஷாய் (6%)[16][17] மற்றும் கசாரா மற்றும் நர்திஸ்தானியர்கள் (6%) என கணிசமான சிறுபான்மையினரும் உள்ளனர்.

Remove ads

பொருளாதாரம்

மாகாணப் பொருளாதாரத்தில் வேளாண்மை மிகப்பெரிய பகுதியாக உள்ளது. மாகாணத்தின் குறிப்பிடத்தக்க பயிராகவும், வணிகப் பொருளாகவும் குங்குமப்பூ, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாரம் ஒரு நாள், சந்தை நாளாக (மேளா என்று அழைக்கப்படுகிறது) உள்ளது. இந்த நிகழ்வானது ஒரு வர்த்தக மற்றும் சமூக நிகழ்வாக உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads