பாக்ராம்

From Wikipedia, the free encyclopedia

பாக்ராம்
Remove ads

பாக்ராம் (Bagram) (بگرام Bagrām) ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணத்தில் [1]உள்ள பாக்ராம் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். [2]இந்நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.

விரைவான உண்மைகள் பாக்ராம் Bagram, நாடு ...
Thumb
ஆப்கானிஸ்தானில் பாக்ராம் நகரத்தின் அமைவிடம்

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரத்திலிருந்து வடக்கே 28 கிலோ மீட்டர் தொலைவில் பாக்ராம் நகரம் உள்ளது. பண்டைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பக்ராம் நகரம் பட்டுப் பாதையில் உள்ளது. [3] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 4,895 அடி (1,492 மீ) உயரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

பண்டைய வரலாறு

இதிகாசம் மற்றும் புராணங்களின் பக்ராம் பகுதியை காம்போஜர்கள் ஆண்டதாக குறிப்பிடுகிறது. சமசுகிருத மொழியில் பாக்ராம் என்பதற்கு ராமனின் தோட்டம் எனப்பொருளாகும். [4]

Thumb
பாக்ராம் நகரத்தில் கிடைத்த கிரேக்கம் மற்றும் அரமேயம் மொழியில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள், ஆப்கான் தேசிய அருங்காட்சியகம்

தியாடோச்சி ஆட்சிக் காலத்தில், கிரேக்கப் படைத்தலைவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மௌரிய வம்சத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், தனது ஆட்சியை பாரத நாட்டை வடக்கிலும், வட மேற்கிலும் விரிவு படுத்தினார்.

கிபி 305ல் கிரேக்க செலூக்கியப் பேரரசர், செலூக்கஸ் நிக்காத்தர் - சந்திரகுப்த மௌரியரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தற்கால தெற்கு ஆப்கானிஸ்தானின் அரசோசியா, காந்தாரம் மற்றும் பாக்ராம் பகுதிகள் மௌரியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. 120 ஆண்டு கால மௌரிய ஆட்சியில் பாக்ராம் நகரப் பகுதிகளில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கங்கைச் சமவெளி முதல் காபூல் வரை சாலை அமைக்கப்பட்டது. அசோகர் காலத்தில் இப்பகுதிகளில் வணிகம், கலை, இலக்கியம், தொழில் மற்றும் பௌத்த தூபிகள் நிறுவுதல் சொழித்தோங்கியது.

அசோகரது அவையில் பிராகிருதத்துடன் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளும் பயிலப்பட்டது.

பாக்ராம் பகுதியில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டிருந்த அசோகர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.

கிபி முதல் நூற்றாண்டில் பாக்ராம் நகரம் குசானர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தற்கால பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தை கனிஷ்கர் கைப்பற்றினார்.

இப்பகுதிகளின் பண்டைய தொல்பொருட்கள் கிரேக்க, உரோமானிய, சீன மற்றும் இந்தியக் கலைநயத்துடன் கூடியிருந்தது.

இசுலாமிய படையெடுப்புகள்

கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர்கள் பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.

இருப்பினும் கஜினி முகமது காலத்தில் தான் பாக்ராம் முழுமையாக இசுலாமிய மயமானது.

மொகலாய மன்னர் பாபர் தான் தற்கால பாக்ராம் நிறுவியதாக கருதுகின்றனர்.[5]

தற்கால வரலாறு

பாக்ராம் நகரம், அமெரிக்காவின் போர் விமான தளமாகப் பயன்படுகிறது.

மேலும் அமெரிக்கர்கள் பாக்ராம் பகுதியில் ஒரு காவல் தடுப்பு மையத்தை பராமரித்துக் கொண்டிருந்தனர். 25 மார்ச் 2013ல் இதனை ஆப்கானிஸ்தான் அரசிடம் கொடுத்து விட்டனர்.[6]

Remove ads

படக்காட்சிகள்

பாக்ராம் நகரத்தில் கிடைத்த, கிபி ஒன்றாம் நூற்றாண்டு காலத்திய கலைப் பொருட்கள்

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads