கம்பம் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்பம் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதியாகும். மேற்கே ஏலமலையையும் கிழக்கே வருசநாட்டுக் குன்றுகளையும் தெற்கே சுருளி மலையையும் கொண்டு இப்பள்ளத்தாக்கு விளங்குகிறது. வைகையாற்றின் துணையாறான முல்லையாறு (முல்லைப்பெரியாறு) இப்பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது. தேனி, கம்பம், கமயகவுண்டன் பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் ஆகியன இப்பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான நகரங்களாகும். இப்பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் இருபோக நெற்சாகுபடி நடைபெறுகிறது. திராட்சை, தென்னை, வாழை ஆகியவையும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளன. இப்பள்ளத்தாக்கில் உள்ள கமயகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர் முதலான ஊர்கள் கறுப்புத்திராட்சை உற்பத்திக்குப் பெயர்பெற்றவையாகும்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இப்பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இவ்வூரில் கன்னடம் மொழி பேசும் ஒக்கலிக கவுடர், தொட்டிய நாயக்கர் , கப்பிலியர் அதிக அளவில் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads