கம்போங் சுங்கை பெஞ்சாலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்போங் சுங்கை பெஞ்சாலா, (ஆங்கிலம்; மலாய்: Kampung Sungai Penchala; சீனம்: 彭查拉河村); என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் கூட்டரசு பிரதேச-சிலாங்கூர் எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமம், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நடுத்தர நகரத்திற்கு அடுத்ததாகவும்; முத்தியாரா டாமன்சாரா மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாராவையும் ஒட்டியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள மலாய் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் ஒன்றாக கம்போங் சுங்கை பெஞ்சலாவை மலேசிய அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டு உள்ளது. இருந்தாலும், இந்தக் கிராமம் தீவிரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Remove ads
அணுகல்
1998-ஆம் ஆண்டில், இந்தக் கிராமத்தின் மேற்கு எல்லையில் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (LDP) திறக்கப்பட்டது. இந்தச் சாலை பண்டார் செரி டாமன்சாரா, சுங்கை பூலோ, கெப்போங் மற்றும் கோம்பாக் ஆகிய நகரங்களை கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2) வழியாக வடக்கில் கம்போங் சுங்கை பெஞ்சாலாவை இணைக்கிறது; தெற்கில் டாமன்சாரா உத்தாமா, டாமன்சாரா நகரங்களையும்; தெற்கில் கிளானா ஜெயாவையும் இணைக்கிறது.
போக்குவரத்து
இந்தக் கிராமத்தை 9 காஜாங் வழித்தடத்தின் KG08 முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தின் மூலமாக அணுகலாம்.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads