கருனகு
பண்டைய எகிப்திய கோயில் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.[1][2]


கர்னாக்கில் மத்தியகால இராச்சியத்தை (கிமு 2055 – கிமு 1650) ஆண்ட முதலாம் செனுஸ்ரெத் எனும் பார்வோன் வெள்ளைக் கோயிலை நிறுவினார். கிமு 2050-களில் கட்டப்பட்ட அமூன் மற்றும் இரா கடவுளர் கோயில்கள் தாலமி வம்சம் வரை (கிமு 30) நல்ல நிலையில் இருந்தது. பின்னர் சிதிலமைடைந்தது போயிற்று. இது எகிப்தில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.[3][4]இந்நகரத்த்தின் கர்னாக் கோயிலில் பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கொண்ட கர்னாக் மன்னர்கள் பட்டியல் அடங்கிய கல்வெட்டு வரிசைகள் கிடைத்துள்ளது.
கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசாவின் மாபெரும் பிரமிட்களுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னக் என்பது இந்த அமொன் ரே வளாகம் மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.
மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், மூத் வளாகம் (Precinct of Mut), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன.
கர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப்பகுதியின் கட்டுமானப் பணிகள் கிமு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 பார்வோன்கள் இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக்கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads