கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா
இந்திய நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா (Kalamandalam Kalyanikutty Amma) (1915-1999) என்பவர் தென்னிந்தியாவின் கேரளாவிலுள்ள மலப்புறம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரிலிருந்து வந்து மோகினியாட்டத்தில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய பெண் நடனக் கலைஞராவார். மோகினியாட்டத்தை ஒரு மோசமான, கிட்டத்தட்ட அழிந்துபோன நிலையில் இருந்து ஒரு பிரதான இந்திய பாரம்பரிய நடனமாக மீண்டும் உயிர்ப்பிப்பதில், அதை முறையான அமைப்பு மற்றும் அலங்காரமாக மாற்றுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.[1] கல்யாணிகுட்டி அம்மா 1999 மே 12 அன்று தனது 84 வயதில் காலமானார்.

Remove ads
பின்னணி
கேரள கலாமண்டலத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவரான கல்யாணிகுட்டி அம்மா, மறைந்த கதகளி நிபுணர் பத்மசிறீ கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[2] 78 வயதான கிருட்டிண பணிக்க ஆசானிடமும் இவர் மோகினியாட்டத்தை கற்றார். சமசுகிருதத்தில் முதுகலை பாடநெறிமுறைகளுக்கு சில கையெழுத்து பிரதிகளை தேடினார். கலாமண்டலத்தில் சேருவதற்கு முன் இலக்கியம், விளையாட்டு மற்றும் யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். நடனக்கலையைக் கற்க இவரது குடும்பம் இவரை அனுமதிக்கவில்லை. கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் இவரது குடும்பத்தை சமாதானபடுத்தி கலாமண்டலத்தில் சேர்த்தார். 1939இல் இவரது முதல் அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் கதகளி நடனத்தையும் கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனன் ஆகியோரிடம் கற்றுகொண்டார். மேலும் பல கோயில்களுக்குச் சென்று தேவதாசி முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டார்.[3]
Remove ads
சீடர்கள்
கல்யாணிகுட்டி அம்மா எழுதிய இரண்டு புத்தகங்களில், மோகினியாட்டம் - “வரலாறு மற்றும் நடன அமைப்பு” என்பது மோகினியாட்டத்தின் விரிவான மற்றும் ஒரே உண்மையான ஆவணமாக கருதப்படுகிறது.[4] இவரது மகள்கள் சிறீதேவி இராஜன் மற்றும் கலா விஜயன், பேத்திகள் சந்தியா இராஜன், சுமிதா இராஜன் உட்பட பலர் இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
விருதுகள்
கேரள சங்கீத நாடக அகாதமி மற்றும் கேந்திர சங்கீத நாடக அகாதமி விருதுகள் இரண்டையும் பெற்ற கல்யாணிகுட்டி அம்மா 1999 மே 12 அன்று திருப்பூணித்துறையில் (தம்பதியர் குடியேறிய இடத்தில்) தனது 84 வயதில் காலமானார். இவரது இரண்டு மகள்கள் சிறீதேவி இராஜன் மற்றும் கலா விஜயன் மற்றும் மிருணாளினி சாராபாய், தீப்தி ஓம்செரி பல்லா, நிர்மலா பணிக்கர், தாரா ராஜ்குமார், சந்தியா ராஜன் மற்றும் சுமிதா இராஜன் உள்ளிட்டோர் இவரது குறிப்பிடத்தக்க சீடர்கள் ஆவர். இவரது மகன் கலாசாலா பாபு ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராக இருந்தார். அதே நேரத்தில் இவரது பேத்தி சுமிதா ராஜன் ஒரு பிரபலமான மோகினியாட்டம் கலைஞர் ஆவார்.
பிரபல கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனனிடமிருந்து இவருக்கு 'கவாயித்ரி' என்ற விருது கிடைத்தது. 1986 ஆம் ஆண்டில் கேரள கலாமண்டல சக் ஊழியர் கௌரவத்தைப் பெற்றார்.
தனி பாணி
கல்யாணிக்குட்டி அம்மா, கலாமண்டலத்தில் கற்றுக்கொண்ட மோகினியாட்டம் நடன பாணியை முறைப்படுத்தி வளர்த்து, கேரளா முழுவதும் பல இளம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவரது பாணி மோகினியாட்டத்தின் கல்யாணிக்குட்டியம்மா பாணி என்று பிரபலமாக அறியப்படுகிறது.[5] மேலும், இந்தியாவுக்கு அப்பாலும் மோகினியாட்டக் கலையை கொண்டு சென்றார். மிலானா செவர்ஸ்கயா என்ற உருசியக் கலைஞர் இவரிடம் பயின்ற முதல் வெளிநாட்டுக் கலைஞர் ஆவார்.[6] 1997 ஆம் ஆண்டில், கல்யாணிகுட்டி அம்மா, மோகினியாட்ட மரபின் தொடர்ச்சிக்காக அவரை ஆசீர்வதித்தார். மிலானா செவர்ஸ்கயா, உருசியாவின் சென் பீட்டர்சுபெர்குவில் இந்தியாவிற்கு வெளியே முதல் கல்வி மோகினியாட்டக் கல்விப் பள்ளியை உருவாக்கினார். அங்கு அவர் நாட்டிய நாடகத்தை நிறுவினார். அங்கு கல்யாணி அம்மாவின் நடன அமைப்பைக் காணலாம். தனது குரு கல்யாணிகுட்டி அம்மாவின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் தனது குரு வயதான காலத்திலும் நடனத்தை எவ்வாறு கற்பித்தார் என்பதைக் காணலாம்.[7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads