கல்பற்றா நாராயணன்

மலையாள கவிஞர் From Wikipedia, the free encyclopedia

கல்பற்றா நாராயணன்
Remove ads

கல்பற்றா நாராயணன் (Kalpatta Narayanan, மலையாலம்: കല്പറ്റ നാരായണൻ, பிறப்பு: சனவரி 1952) ஒரு இந்தியப் புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளரும், நாளிதழ்களின் பத்திகளைக் கையாள்பவரகவும் மற்றும் மலையாள இலக்கியத்தின் கவிஞரும் ஆவார். இவர் தனது புதினமான் இத்ரமாத்ரம் மற்றும் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் மற்றும் பிற இலக்கிய பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர் . பஷீர் இலக்கிய விருது, அய்யப்பன் புரஸ்காரம் மற்றும் இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

விரைவான உண்மைகள் கல்பற்றா நாராயணன், பிறப்பு ...

மலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் கல்பற்றா நாரயணன் ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ஒழிஞ்ஞ விருட்ச சாயையில் என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்

நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கோந்தலா என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1][2] கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கே. வி. ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்ற பேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். (வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு)

Remove ads

சுயசரிதை

தென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கல்பற்றாவிற்கு அருகிலுள்ள கோத்தத்தாரா என்ற கிராமத்தில் பாலுக்கப்பில் சங்கரன் நாயர் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்கு 1952 சனவரியில் நாராயணன் பிறந்தார்.[3] கல்பற்றாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். பின்னர், கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். தலசேரி அரசு பிரென்னன் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு, தான் படித்த கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

நாராயணன் இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிரபுல்லச்சந்திரன் மற்றும் சரத்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[3]

Remove ads

ஆளுமை

கல்பற்றா நாராயணன் இத்ரமாத்ரம் என்ற ஒரு புதினத்தை எழுதியுள்ளார். மேலும் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் பொது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் பத்திகளைக் கையாண்டுள்ளார். ஈ கன்னடயோனு வச்சோ நோக்கு மத்யமம் மற்றும் புத்தபக்சம் மலையாள மனோரமா போன்ற இதழ்களில் இரண்டு நெடு வரிசை பத்திகளை எழுதி வருகிறார். பல்வேறு இலக்கியம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் இவர் உரை நிகழ்த்தியுள்ளார்.[4] இத்ரமாத்ரம் என்ற அவரது புதினம் 2012 ஆம் ஆண்டில் அதே பெயரில் [5][6] திரிப்படமாக தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைக்கம் முகம்மது பஷீர் குறித்த இவரது ஆய்வு, எத்தியலம் மதுரிக்குன்னா கடுகலில் என்ற தலைப்பில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விப் படிப்புகளுக்கு உரையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[7]

Remove ads

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

2013 ஆம் ஆண்டில், நாராயணன் தனது புராணக்கதையான ஒரு முடந்தாந்தே சுவிசேசம் என்பதற்காக அய்யப்பன் புரஸ்காரத்தைப் பெற்றார்.[8] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது புத்தகம், கவிதாயுடே ஜீவச்சரித்ரம் என்ற படைப்பு பஷீர் இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[9] தோஹா பிரவாசி மலையாளி விருது, முனைவர் டி. பாஸ்கரன் விருது, வி. டி. குமரன் விருது, சாந்தகுமாரன் தம்பி விருது, சி.பி.சிவதாசன் விருது மற்றும் முனைவர் பி. கே.ராஜன் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.[10] இலக்கிய விமர்சனத்திற்கான 2017 கேரள சாகித்ய அகாதமி விருதுக்கு அவரது புத்தகமான, கவிதாயுதே ஜீவச்சாரித்ரம் என்ற படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.[11] மலையாள இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக 2018 ஆம் ஆண்டில் பத்மபிரப இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.[12]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads