காரைதீவு (யாழ்ப்பாணம்)
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தீவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரைதீவு (Karaitivu) யாழ்ப்பாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் (9 மைல்) தொலைவில் உள்ள வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். காரைதீவு தமிழ் மொழி்யில் காரைப் புதர்ச்செடிகள் நிறைந்த தீவு என்று பொருள்படுகிறது. இது தமிழ் வார்த்தையான காரை என்னும் (ரூபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த வேபரா டெட்ராண்ட்ரா என்னும் முட்கள் நிறைந்த செடியாகும்).[1]
இடச்சுகாலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஆம்ஸ்டர்டாம் என அறியப்பட்ட இந்தத் தீவு 22.95 சதுர கிலோமீட்டர் (8.86 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.[2][3] இந்த தீவு ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன் மொத்த மக்கள் தொகையில் 9,576 பேர் 2012 கணக்கெடுப்புகளில் இருந்தனர்.[4]
காரைதீவு யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒரு தரைப்பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அண்டைப் பிரதேசமான வேலணைத் தீவில் உள்ள ஊர்காவற்துறைக்குப் படகுச் சேவையைக் கொண்டுள்ளது.[5][6] தீவின் முக்கிய நகரம் காரைநகர் ஆகும்.[7] பிரபலமான கசூரினா கடற்கரை (en:Casuarina Beach) இந்தத் தீவில் அமைந்துள்ளது.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads