கார்ஸ் மாகாணம்

துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கார்ஸ் மாகாணம்
Remove ads

கார்ஸ் மாகாணம் (Kars Province, துருக்கியம்: Kars ili , ஆர்மீனியம்: Կարսի նահանգ ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ஆர்மீனியாவுடன் மூடப்பட்ட சர்வதேச எல்லையின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கர்ஸ் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அர்தாகான் மாகாணம் மற்றும் ஐடார் மாகாணங்கள் 1990 களில் இருந்தன.

விரைவான உண்மைகள் கார்ஸ் மாகாணம் Kars ili, நாடு ...
Remove ads

மக்கள்வகைப்பாடு (1874-1950)

மேலதிகத் தகவல்கள் இனக் குழுவினர், % ...
Remove ads

மாவட்டங்கள்

கார்ஸ் மாகாணம் 8 மாவட்டங்களாக ( ilçe ) பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அந்த மாவட்டத்தின் தலைநகரின் பெயர் இடப்பட்டுள்ளது.

கார்ஸ் மாகாணத்தில் 383 கிராமங்கள் உள்ளன.

கார்ஸ் இயற்கை, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா

Thumb
அனியில் உள்ள அபுகர்மிட்ஸ் புனித கிரிகோரி தேவாலயம்

குசெடோகா சொசைட்டி நடத்தும் கார்ஸ்-இக்டிர் பல்லுயிர் திட்டத்தால் ஆவணப்படுத்தப்படும் வனவிலங்கு செல்வத்தை கார்ஸ் மாகாணம் கொண்டுள்ளது.[5] இத்திட்டத்தில் துருக்கியின் 468 பறவை இனங்களில் 323 பறவை இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் குறைந்தது 223 பறவைகள் குயுகுக் ஏரியில் காணப்படுகின்றன [6] இது இப்பகுதியில் மிக முக்கியமான சதுப்பு நிலம் ஆகும். தென் ஆர்பர் பகுதிதில் உள்ள சரிகாமிஸ் காடுகளில் இந்திய ஓநாய்கள், சிரிய பழுப்பு கரடி, காகசியன் லின்க்ஸ் மற்றும் பிற விலங்குகள் உள்ளன. மேலும் அராஸ் (அராக்ஸ்) ஆற்று சதுப்பு நிலப் பகுதிகளானது வலசை செல்லும் பல பறவைகள் தங்கி செல்லும் ஒரு முக்கிய இடமாக உள்ளது. யூகாரி சியரிக்லி கிராமத்தில் உள்ள அராஸ் ஆற்றுப் பறவை ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் இந்த ஒற்றை இடத்தில் மட்டும் 228 பறவை இனங்களை பதிவு செய்துள்ளது.

பொருளாதாரம்

கார்ஸ் மாகாணத்தின் பொருளாதாரமானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் வனவியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. கார்ஸ் மாகாணத்தில் வேலை செய்யும் மக்களில் 85% பேர் வேளாண் மக்கள் அல்லது கால்நடை மேய்ப்பர்கள் ஆவர். மாகாணத்தின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 60% இந்த துறைகளிலிருந்து பெறப்படுகிறது. தொழில் துறை, சுற்றுலா மற்றும் வர்த்தகம் போன்றவை வளர்ந்து வருகின்ற பிரிவுகளாக உள்ளன.[7]

இப்பகுதியில் தாவரங்கள் வளர்க்கப்படுவதானது காலநிலையால் கட்டுப்படுத்துகிறது. காஸ்மேன் மற்றும் துஸ்லூகாவில், பருத்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் வெட்சுகள் போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. காய்கறி தோட்டம் மற்றும் பழத்தோட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடையவில்லை. கோதுமை, பார்லி, பருத்தி மற்றும் சிறிய அளவிலான புகையிலை மாகாணத்தில் விளைவிக்கப்படுகின்றன.[7]

வேளாண்மையை விட இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. இங்கு உள்ள புன்னிலம், புல்வெளிகள் மற்றும் வளமான தாவரங்கள் போன்றவை கால்நடை வளர்ப்பின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. கார்ஸ் மாகாணத்தின் 70% பரப்பளவில் உள்ள புன்னிலம் மற்றும் புல்வெளிகள், தற்போதைய இப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பில் குறைந்தது பத்து மடங்குக்கு போதுமானதாக உள்ளன. துருக்கியின் மிகப்பெருமளவில் கால்நடை வளர்க்கப்படும் மாகாணம் கார்ஸ் ஆகும், இது கால்நடை வர்த்தகத்தின் மையமுமாகும்.[7] காஸ் பிராந்தியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தநான வாத்து இனப்பெருக்கத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கார்ஸ் உணவுகளில் அதன் இறைச்சி ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவது அல்லாமல், வாத்து கல்லீரல் மற்றும் உதிரும் இறகு போன்றவை ஏற்கனவே ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட தொடங்கிவிட்டன.

கார்ஸ் மாகாணத்தில் காடுகள் நிறைய இல்லை என்றாலும் இப்பகுதி காடுகளுக்கு சாதகமான நிலப்பகுதியாகும். மாகாணத்தின் 4% மட்டுமே காடுகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள காடுகளில் ஸ்காட்ஸ் பைன், ஸ்ப்ரூஸ் மற்றும் ஆல்டர் ஆகியவை அதிகம் காணப்படும் மர இனங்கள் ஆகும். சுமார் 15,000 m3 (530,000 cu ft) பரப்பளவில் வனத்துறை மூலம் மரம் நடப்பட்டுள்ளது.[7]

மாகாணத்தில் பாறை உப்பு, ஆசனிக்கு, கல்நார், மெக்னசைட்டு, ஜிப்சம் மற்றும் பெர்லைட் ஆகிய தாது படுக்கைகள் ஆராயப்பட்டுள்ளன, இருப்பினும், இங்கு பாறை உப்பு மட்டுமே வெட்டப்படுகிறது.[7]

கார்ஸில் உள்ள முக்கிய தொழிற் சாலைகளாக இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவனம் பதப்படுத்துதல், தானிய அரவை ஆலை, நூல், தோல் பதனிடுதல், பாதணிகள், சிமென்ட் மற்றும் செங்கல் தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன.[7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads