கிரேஸ் கருணாஸ்

தமிழ் பாடகி, நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிரேஸ் கருணாஸ் (Grace Karunas) என்பவர் ஒரு இந்திய பின்னணிப் பாடகி மற்றும் நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றியுள்ளார். நடிகர் கருணாசின் மனைவியான இவர் தன் கணவர் நடித்த படங்களில் அடிக்கடி பாடியுள்ளார்.

விரைவான உண்மைகள் கிரேஸ் கருணாஸ், பிறப்பு ...

தொழில்

கிரேஸ் தனது ஐந்து வயதில் பூந்தமல்லி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பாடத் தொடங்கினார். இவர் தனது தேவாலயத்திலும் கல்லூரியிலும் தொடர்ந்து பாடினார். கல்லூரியில் நடந்த போட்டிக்கு நடுவராக வந்திருந்த நடிகர் கருணாசின் கவனத்தைக் கவர்ந்தார். பின்னர் இந்த இணையர் திருமணம் செய்து கொண்டனர்.[1]

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) படத்தில் இவர் திரைப்பட பின்னணி பாடகராக அறிமுகமாகி "சீனா தானா டோய்" என்ற பாடலை பாடினார். கருணாஸ் இவரை படத்தின் இயக்குநர் சரண் மற்றும் இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோரிடம் பரிந்துரை செய்த பின்னர் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. பாடல் வெற்றியாள் இவர் பிரபலமானார். விரைவில் இவர் தேவதையைக் கண்டேன் (2004) படத்திற்காக "விளக்கு ஒண்ணு", கற்க கசடற படத்தில் "ஆலப்புழா அம்மணி அல்லோ", ஆறு (2005 ) படத்தில் "பிரியா விடு மாமு", சண்டை (2008) படத்தில் "வாடி என் கப்பக் கிழங்கே" பாண்டி (2008) படத்தில் "ஆடியடங்கும்" போன்ற பிற படங்களில் பாடினார்.[1] 2010 களில், வழக்கமாக கருணாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் இவர் பாடினார்.[2] திரைப்படங்களில் படுவதுடன், கிரேஸ் பெரும்பாலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார்.[3][4]

கிரேஸ் படங்களில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார், குறிப்பாக திருவிளையாடல் ஆரம்பம் (2006) மற்றும் கதகளி (2016) ஆகிய படங்களில் துணை வேடங்களில் தோன்றினார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

கிரேஸ் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாசை மணந்தார், அவரின் படங்களில் பெரும்பாலும் பாடகியாக பணியாற்றியுள்ளார். இந்த இணையரின் மகனான கென் அழகு குட்டி செல்லம் (2016) படத்தில் நடிகராக அறிமுகமாகி படங்களில் நடித்துள்ளார்.[5]

குறிப்பிடத்தக்க இசைப்பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பாடல் ...

திரைப்படவியல்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads