கிழக்கு சாவகம்

இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கிழக்கு சாவகம்
Remove ads

கிழக்கு சாவகம் (East Java, கிழக்கு ஜாவா, Indonesian: Jawa Timur, சாவகம்: Jåwå Wétan)[4] என்பது இந்தோனேசியாவின் ஒரு நுவாக மாகாணம் ஆகும். சாவகத் தீவின் கிழக்கே அமைந்துள்ள இம்மாகாணத்தில் மதுரா, கங்கியன், மாசாலெம்பு ஆகிய தீவுகள் வடக்கு மற்றும் கிழக்கே அமைந்துள்ளன. இதன் தலைநகர் சுராபாயா இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமும், முக்கிய தொழில் மையமும் ஆகும்.

விரைவான உண்மைகள் கிழக்கு சாவகம்East Java ஜாவா திமூர், நாடு ...

கிழக்கு சாவகத்தின் பரப்பளவு 47,800 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி இங்கு 37,476,757 பேர் வாழ்கின்றனர். இது இந்தோனேசியாவின் இரண்டாவது அதிகூடிய மக்கள்தொகை உள்ள மாகாணம் ஆகும். 2014 சனவரி கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 38,529,481 ஆகும்.

கிழக்கு சாவகம் மேற்கே நடுச் சாவக மாகாணத்துடன் நில எல்லையைக் கொண்டுள்ளது. வடக்கே சாவகக் கடலும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் உள்ளன. கிழக்கேயுள்ள ஒடுக்கமான பாலி நீரிணை சாவகத் தீவை பாலியில் இருந்து பிரிக்கிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads