கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்

From Wikipedia, the free encyclopedia

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்map
Remove ads

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 1905 வங்காளப் பிரிவினைக்கு பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1905 முதல் 1912 முடிய செயல்பட்ட நிர்வாக மாகாணம் ஆகும். இது தற்கால வங்காளதேசம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகரம் டாக்கா நகரம் ஆகும். [1] [2]

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

வங்காளப் பிரிவினை

Thumb
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிப் பரப்பில் 1765ல் இணைக்கப்பட்ட வங்காளம் மற்றும் 1838ல் இணைக்கப்பட்ட வடகிழக்கு இந்தியப் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

1868ல் உருவான வங்காள மாகாணம், 1781ல் கட்டப்பட்ட வில்லியம் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் ஆண்டனர்.

வங்காள மாகாணம், மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே வடகிழக்கு இந்தியா வரை பரவியிருந்தது. நிர்வாக வசதிக்காக 16 அக்டோபர் 1905ல் வங்காளப் பிரிவினையின் மூலம் வங்காள மாகாணத்தை பிரித்து, இசுலாமியர்கள் அதிகம் கொண்ட கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பிராந்தியத்தை, 16 அக்டோபர் 1905ல் இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபு உருவாக்கினர். [3]கிழக்கு வங்காள மாகாணத்தின் தலைநகராக டாக்கா விளங்கியது.

பிரிவினைக்கு ஆதரவும் எதிர்ப்பும்

வங்காளப் பிரிவினைக்கு இப்பிரிவினைக்கு அகில இந்திய முசுலிம் லீக் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

Thumb
1905ல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினை மூலம் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை துவக்குதல்
Remove ads

கிழக்கு வங்காளத்தின் துணைநிலை ஆளுநர்கள்

வங்காள ஆளுநரின் கீழ் சர் ஜோசப் பாம்பீல்டு புல்லர் (1905 – 1906), சர் லான்ஸ்லோட் ஹரி (1906-1911), சர் சர்லஸ் பெய்லி (1911-1912) ஆகியோர் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பிராந்தியத்தின் துணைநிலை ஆளுநர்களாக பணியாற்றினர்.

பிரித்தானியர்களின் இந்த பிரித்தாளும் கொள்கையை இந்து மகாசபை மற்றும் மகாத்மா காந்தியும் கடுமையாக எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்திய விளைவாக,[4] 21 மார்ச் 1912ல் பிரித்தானிய இந்தியா அரசு வங்காள மொழி பேசும் கிழக்கு வங்காளத்தை, மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைத்தனர். எஞ்சியிருந்த அசாம் பகுதியை தனி மாநிலமாக அறிவித்து, அதனை நிர்வகிக்க முதன்மை ஆனையாளரை நியமித்தனர்.

Remove ads

நிர்வாகம்

பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதியான தலைமை ஆளுநரின் கீழ் பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகம் செயல்பட்டது. தலைமை ஆளுநரின் கீழ் துணைநிலை ஆளுநர்களும், ஐந்து முதன்மை ஆனையாளர்களும் மற்றும் பல முகவர்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டனர்.

பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், சென்னை மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உயர்நீதிமன்றங்களும், வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட சட்டமன்றங்களும் நிறுவப்பட்டது.

கிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றம் உருவானது. மேலும் உள்ளாட்சிக் குழு, மாவட்டப் பஞ்சாயத்துக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுக்களில் கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். [5]

கிழக்கு வங்காளத்தின் கோடைகால தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. [6]

கோட்டங்களும், மாவட்டங்களும்

கிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தின் நிர்வாக வசதிக்காக, அசாம் கோட்டம், ராஜசாகி கோட்டம், சிட்டகாங் கோட்டம், டாக்கா கோட்டம் என 4 நிர்வாகக் கோட்டங்களாகவும், முப்பது மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. [3]

மக்கள் தொகையியல்

1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு வங்காளம் & அசாம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 30,961,459 ஆகும்.[3] இதில் வங்காளிகள் 27,272,895 ஆகவும்; அசாமியர்கள் மற்றும் சக்மா, மிசோ, திபெத்திய-பர்மியர்கள், நாகா, போடோ, காரோ போன்ற பழங்குடி மக்கள் 1,349,784 ஆக இருந்தனர்.[3]மக்கள் தொகையில் கிழக்கு வங்காளம் & அசாம் மாகாணத்தில் இந்துக்கள் 18,036,688 ஆகவும், இசுலாமியர்கள் 12,036,538 ஆகவும் இருந்தனர்[3] மேலும் பௌத்தர்கள், கிறித்தவர்கள் மற்றும் பழங்குடி தெய்வ வழிபாட்டாளர்களும் கனிசமாக இருந்தனர்.

Remove ads

பொருளாதாரம்

Thumb
கிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தின் தேயிலைத் தோட்டங்கள்

கிழக்கு வங்காளம் & அசாம் பகுதியின் வடக்கில் அசாம் பகுதியில் தேயிலையும், கச்சா எண்ணெயும், பத்மா ஆறு & பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலங்களில் நெல்லும், சணலும் அதிக அளவில் உற்பத்தி ஆகியது. அசாம் – பெங்கால் இரயில்வே மற்றும் சிட்டகாங் துறைமுகம் போக்குவரத்திற்கும், ஏற்றுமதிக்கும் உதவின.

Thumb
19ம் நூற்றாண்டின் நீராவி இரயில் எஞ்சின், சிட்டகாங்
Thumb
1908ல் நீர் வழி போக்குவரத்திற்கான நீராவிப் படகுகள்
Remove ads

வங்காளப் பகுதிகள் மீண்டும் இணைத்தல்

வங்காளிகளின் இடைவிடாத போராட்டங்களின் விளைவாக 21 மார்ச் 1912ல் கிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தின், கிழக்கு வங்காளத்தை மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அசாம் பகுதி துணைநிலை ஆளுநரின் கீழ் சென்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads