குசான-சாசானிய இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குசான-சாசானிய இராச்சியம் (Kushano-Sasanian Kingdom) (ஆட்சிக் காலம்:கிபி 230 -370) (also called (Kushanshas) குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாரசீகத்தின் சாசானியர்களின் ஒரு கிளையினர் குசான-சாசானிய இராச்சியத்தை நிறுவி, நடு ஆசியாவின் சோக்தியானா, பாக்திரியா, மெர்வி, பால்க், தற்கால ஆப்கானித்தான் மற்றும் தற்கால பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதிகளை கிபி 230 முதல் கிபி 365 முடிய 140 ஆண்டுகள் ஆண்டனர். குசான-சாசானிய இராச்சிய மன்னர்கள் சொராட்டிரிய நெறி இந்து சமயம் மற்றும் மானி சமயங்களை ஆதரித்தனர். இம்மன்னர்கள் தங்கள் உருவத்துடன், சூலம் ஏந்திய சிவனின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டனர்.

கிமு 225-இல் சாசானியர்களின் ஒரு பிரிவினர், குசான் பேரரரசின் வீழ்ச்சியின் போது, சோக்தியானா, பாக்திரியா மற்றும் காந்தாரப் பகுதிகளை குசானர்களிடமிருந்து கைப்பற்றி அப்பகுதிகளுக்கு ஆளுநர்களை நியமித்தனர். பின்னர் இந்த ஆளுநர்கள், சாசானியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களாக, தங்களை குசானர்களின் மன்னர்கள் ("Kings of the Kushans")[3] என அழைத்துக் கொண்டதுடனர். இவர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் குசான-சாசானிய இராச்சிய மன்னர்களின் வரலாறு ஓரளவு அறிய கிடைக்கிறது.
மூன்றாம் பெரோஸ் குஷான்ஷா ஆட்சியின் போது, கிபி 370-இல் குசான-சாசானிய இராச்சியத்தின் மீது நடு ஆசியாவில் வாழ்ந்த நாடோடி மக்களான கிடாரைட்டுகள் தொடுத்தப் போரில், குசான-சாசானிய இராச்சியத்தின் பெரும்பகுதிகளை கிடாரைட்டுகள் கைப்பற்றினர். எஞ்சிய குசான-சாசானிய இராச்சியத்தின் பகுதிகள் சாசானியப் பேரரசில் இணைக்கப்பட்டது.[4] பின்னர் கிடாரைட்டு மக்களை ஹெப்தலைட்டுகள் வென்றனர்.[5]கிபி 565-இல் சாசானியர்கள், நடு ஆட்சியாவின் துருக்கியகளுடன் இணைந்து ஹெப்தலைட்டு மக்களை விரட்டியடித்தனர். கிபி ஏழாம் நூற்றான்டின் நடுவில் பாரசீகத்தில் இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் சாசானிய பேரரசு வீழ்ந்தது.
Remove ads
முக்கிய குசான-சாசானிய ஆட்சியாளர்கள்




- முதலாம் அர்தசீர் குசான்ஷா (230–245)
- முதலாம் பெரோஸ் குசான்ஷா (245–275)
- முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (275–300)
- இரண்டாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (300–303)
- இரண்டாம் பெரோஸ் குசான்ஷா (303–330)
- பக்ராம் குசான்ஷா (330-365)
- மூன்றாம் பெரோஸ் குஷான்ஷா (365 -370)
Remove ads
படக்காட்சிகள்
- 230-245-இல் முதலாம் வாசுதேவன் என்ற பெயரில் ஆண்ட குசான-சாசானிய மன்னர் முதலாம் அர்தசீர் உருவம் பொறித்த நாணயம்.[7]
- இந்தோ சசானியர்கள் நாணயம்
- இந்தோ சசானியர்கள் தங்க நாணயம்
- அகுரா மஸ்தா என்றழக்கப்பட்ட முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா உருவம் பொறித்த நாணயம்
- இறுதி குசான்ஷா மூன்றாம் பெரோசின் நாணயம்

இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
