குவாந்தான் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாந்தான் மாவட்டம் (ஆங்கிலம்: Kuantan District; மலாய்: Daerah Kuantan; சீனம்: 关丹县; சாவி: كوانتن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் செராண்டுட்டு மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
மாரான் மாவட்டத்தில் 6 முக்கிம்கள் உள்ளன:[3]
- பெசெரா - Beserah
- குவாந்தான் - Kuantan
- பெனோர் - Penor
- சுங்கை காராங் - Sungai Karang
- சுங்கை லெம்பிங் - Sungai Lembing
- உலு லேப்பார் - Ulu Lepar
குவாந்தான் மாவட்ட வரலாறு
முதலாம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika; சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[4][5]
11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Remove ads
மக்கள்தொகையியல்
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
தட்பவெப்ப நிலை
குவாந்தான் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads