கேம்பஸ் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேம்பஸ் (Campus) 2004 ஆம் ஆண்டு அறிமுக நடிகர்கள் சஜித் ராஜ், நிதீஷ், திவ்யா மற்றும் ஷீத்தல் ஷா இவர்களுடன் சுகன்யா, ஆனந்த்ராஜ் மற்றும் ராசன் பி. தேவ் நடிப்பில் சார்வி இயக்கத்தில், பிரான் மற்றும் ஆரிஃப் தயாரிப்பில், ரஜ்னீஷ் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].

விரைவான உண்மைகள் கேம்பஸ், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

படத்தின் கதை மாடல் கலைக் கல்லூரியில் நடக்கிறது. நற்பெயருடன் விளங்கிய இக்கல்லூரி சமீபகாலமாக பல ஒழுங்கீன நடவடிக்கைகளாலும், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் நடைபெறுவதாலும் தன் நற்பெயரை இழந்துவிட்டது. சத்யா (சஜித் ராஜ்) மற்றும் ராக்கி (நிதேஷ்) இருவரும் அக்கல்லூரியில் இரண்டு குழுவாக செயல்படும் மாணவர்களின் தலைவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கிறது.

கல்லூரியின் நிர்வாகிகள் ஆர். கே. தேவராஜ் (தேவன்) மற்றும் அமைச்சர் சத்தியசீலன் (ராசன் பி. தேவ்) இருவரும் அக்கல்லூரியை இடிக்கத் திட்டமிடுகின்றனர். இதனால் அதிர்ச்சியடையும் மாணவர்கள் கல்லூரியை இடிக்கவிடாமல் தடுக்க முடிவுசெய்கின்றனர். அந்தக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர் பிரியா (சுகன்யா) மாணவர்களின் மோசமான நடவடிக்கைகளே கல்லூரியை இடிக்கக் காரணம் என்று மாணவர்களிடம் கூறி அவர்களை நல்லவர்களாக மாற்றி அதன்மூலம் கல்லூரியின் நற்பெயரை மீட்க முயல்கிறார். அவர் முயற்சியால் கல்லூரி மாணவி ஷீத்தல் (ஷீத்தல் ஷா) கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்று தன் கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறார். இதனால் நம்பிக்கை அடையும் மற்ற மாணவர்களும் தங்களின் நடவடிக்கைகளைத் திருத்திக்கொண்டு கல்லூரியின் நற்பெயரைக் காப்பற்றுவதன் மூலம் கல்லூரியை இடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தமுடியும் என்று எண்ணுகின்றனர். பிரியாவிற்கு உதவி செய்வதற்காக எதிரெதிர் துருவங்களான சத்யாவும் ராக்கியும் நண்பர்களாக இணைகின்றனர்.

சத்தியசீலன் கல்லூரியிலிருந்து மாணவர்களை வெளியேற்ற செய்யும் சதிகளை அவர்கள் எப்படி முறியடித்து தங்கள் கல்லூரியைக் காப்பாற்றுகின்றனர் என்பது மீதிக்கதை.

Remove ads

நடிகர்கள்

  • சஜித் ராஜ் - சத்யா
  • நிதேஷ் - ராக்கி
  • திவ்யா - திவ்யா
  • ஷீத்தல் ஷா - ஷீத்தல்
  • சுகன்யா - பிரியா
  • ஆனந்த்ராஜ்
  • ராசன் பி. தேவ் - சத்தியசீலன்
  • தேவன் - ஆர். கே. தேவராஜ்
  • மனோபாலா - நல்லதம்பி
  • பாபு ஆன்டனி
  • விஜயன்
  • சேது விநாயகம் - ஸ்ரீவல்லபன்
  • லட்சுமி ரத்னம் - ராஜபவன்
  • பயில்வான் ரங்கநாதன்
  • மதன் பாப்
  • முத்துக்காளை - அதிவீரன் புலிப்பாண்டி
  • விமல்ராஜ் - சாமி
  • சாஜு கொடியன்
  • கோட்டயம் நசீர்
  • மஹீர் கான்
  • துர்கா செட்டி
  • கலைராணி
  • பாரதி
  • சுஜிபாலா
  • கூல் ஜெயந்த்
Remove ads

இசை

படத்தின் இசையமைப்பாளர் ரஜ்னீஷ். பாடலாசிரியர்கள் பா. விஜய், சினேகன், கலைக்குமார் மற்றும் விவேகா[4][5].

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads