கோத்தா திங்கி மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கோத்தா திங்கி மாவட்டம்map
Remove ads

(கோத்தா திங்கி எனும் பெயரில் கோத்தா திங்கி மாவட்டம்; கோத்தா திங்கி நகரம் என இரு இடங்கள் உள்ளன.)

விரைவான உண்மைகள் கோத்தா திங்கி மாவட்டம்Daerah Kota TinggiKota Tinggi District, நாடு ...

கோத்தா திங்கி மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kota Tinggi; ஆங்கிலம்:Kota Tinggi District; சீனம்:哥打丁宜县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

கோத்தா திங்கி நகரம்; கோலா செடிலி (Kuala Sedili); சுங்கை ரெங்கிட் (Sungai Rengit); மற்றும் பெங்கேராங் (Pengerang) பகுதியின் குடியிருப்புகளைக் கோத்தா திங்கி நகராட்சி (Kota Tinggi District Council) நிர்வகிக்கிறது.

Remove ads

பொது

பெங்கேராங் பகுதியைத் தளமாகக் கொண்ட தென் பகுதிகளைப் பெங்கேராங் நகராட்சி (Pengerang Municipal Council) நிர்வகிக்கிறது. பெங்கேராங் என்பது கோத்தா திங்கி மாவட்டத்தின் துணை மாவட்டமாகும். 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[4]

தேர்தல் முடிவுகள்

மலேசிய மக்களவை

மலேசியப் பொதுத் தேர்தல், 2022

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

மலேசிய மக்களவையில் கோத்தா திங்கி மாவட்டத்தின் தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் #, தொகுதி ...
Remove ads

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோத்தா திங்கி மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[6]

மேலதிகத் தகவல்கள் #, மாநிலம் ...

நிர்வாகப் பகுதிகள்

Thumb
கோத்தா திங்கி மாவட்ட மன்றம்

கோத்தா திங்கி மாவட்ட மன்றம் மற்றும் பெங்கேராங் நகராட்சி மன்றம் ஆகிய இரண்டு உள்ளூராட்சிகளால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது. கோத்தா திங்கி மாவட்ட மன்றம் வடமேற்கு பகுதியை நிர்வகிக்கிறது.

பெங்கேராங் நகராட்சி மன்றம் 16 ஜனவரி 2017-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் பெங்கெராங் உள்ளூர் ஆணையம் என அழைக்கப்பட்டது. இந்தப் பெங்கேராங் நகராட்சி மன்றம் 1,288 கி.மீ. பரப்பளவு கொண்ட தென்கிழக்குப் பகுதியை நிர்வகிக்கிறது.

Remove ads

முக்கிம்கள்

கோத்தா திங்கி மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[7]

Remove ads

நகரங்கள்

  • பண்டார் பெனாவார் (Bandar Penawar)
  • பண்டார் தெங்காரா (Bandar Tenggara)
  • டெசாரு (Desaru)
  • ஜொகூர் லாமா (Johor Lama)
  • கோத்தா திங்கி (Kota Tinggi)
  • கோலா செடிலி (Kuala Sedili)
  • பெங்கேராங் (Pengerang)
  • சுங்கை ரெங்கிட் (Sungai Rengit)
  • தஞ்சோங் சூராட் (Tanjung Surat)
  • தெலுக் செங்காட் (Teluk Sengat)

ஆறுகள்

கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்.

  • ஜொகூர் ஆறு
  • லெபம் ஆறு
  • சாந்தி ஆறு
  • செடிலி பெசார் ஆறு
  • செடிலி கெசில் ஆறு

பொருளியல்

கோத்தா திங்கி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சுற்றுலா; விவசாயம்; உயிரி தொழில்நுட்பம்; பெட்ரோலிய வேதிப்பொருட்கள்; எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகும்.[8]

கோத்தா திங்கி மாவட்ட நிலப்பகுதிகளில் 60% வேளாண்மை நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. டெசாரு கடற்கரைப் பகுதியில், ஜொகூர் மாநில அரசு 1,578 ஹெக்டர் பரப்பளவில் ஓர் ஒருங்கிணைந்த சுற்றுலாப் பகுதியை உருவாக்கி உள்ளது.[9]

சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads