கோபாலசமுத்திரம்

From Wikipedia, the free encyclopedia

கோபாலசமுத்திரம்map
Remove ads

கோபாலசமுத்திரம் (ஆங்கிலம்:Gopalasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

மாவட்டத் தலமையிடமான திருநெல்வேலியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்த கோபாலசமுத்திரத்திற்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் மேலப்பாளையம், மேற்கே 9 கி.மீ. தொலைவில் சேரன்மாதேவி; வடக்கே 4 கி.மீ. தொலைவில் பேட்டை; தெற்கே 22 கி.மீ. தொலைவில் களக்காடு உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2890 வீடுகளும், 10694 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

சிறப்புகள்

நூற்றாண்டைக் கடந்த பண்ணை வெங்கட்டராமய்யர் உயர்நிலைப்பள்ளி இங்கு உள்ளது. இந்த ஊர் மக்களின் முக்கியமான தொழில் விவசாயம் கோபாலசமுத்திரம் கிராமம் மன்னர் காலத்தில் பள்ளியின் நிறுவனர் குடும்பத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.[சான்று தேவை]

ஆலயங்கள்

தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில், பெருமாள் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில்கள் இங்குள்ளன.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads