கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் நகரின் இராஜ வீதியில் அமைந்துள்ள இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயில் ஆகும்.[1] ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

விரைவான உண்மைகள் கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில், ஆள்கூறுகள்: ...

இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 439.3 மீட்டர் (1441 அடி) உயரத்தில், 10.994947°N 76.960229°E / 10.994947; 76.960229 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

இராமலிங்கேசுவரர், சௌடாம்பிகை அம்மன், விநாயகர், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், சிவலிங்கம், காயத்ரி தேவி, அஷ்டலட்சுமிகள், மகிசாசுரமர்த்தினி, தத்தாத்ரேயர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், காமதேனு, கற்பக விருட்சம், ஆஞ்சநேயர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சனீசுவரர், சப்தமாதாக்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

வைகாசி விசாகம், ஐப்பசி பௌர்ணமி (அன்னாபிசேகம்), தைப்பூசம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, ஆவணி அவிட்டம், ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads