கோலா கங்சார் மலாய் கல்லூரி

கோலா கங்சார் அரச நகரில் உள்ள பள்ளி From Wikipedia, the free encyclopedia

கோலா கங்சார் மலாய் கல்லூரிmap
Remove ads

கோலா கங்சார் மலாய் கல்லூரி (மலாய்: Kolej Melayu Kuala Kangsar; ஆங்கிலம்: Malay College Kuala Kangsar) என்பது மலேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளி ஆகும். பேராக் மாநிலம், கோலா கங்சார் அரச நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. ஆண்கள் மட்டும்[4] கற்கும் இந்தப் பள்ளியில், மலாய்க்காரர்கள் மட்டுமே படிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.[5]

விரைவான உண்மைகள் கோலா கங்சார் மலாய் கல்லூரி The Malay College Kuala Kangsar Kolej Melayu Kuala Kangsar كوليج ملايو كوالا كڠسر, முகவரி ...

இந்த மலாய் கல்லூரிக்கு மலேசிய கல்வி அமைச்சு மலேசிய சிறப்பு குழுமப் பள்ளி தகுதிய வழங்கி உள்ளது. அத்துடன் 2010 முதல், இந்தப் பள்ளிக்கு உயர் செயல்திறன் பள்ளி (High Performance School) எனும் சிறப்புத் தகுதியும் வழங்கப்பட்டது. மலேசியாவின் சிறந்த பள்ளிகளுக்கு அந்தச் சிறப்புத் தகுதி வழங்கப்படுகிறது.[6]

பன்னாட்டு இளங்கலைப் பட்டம் அமைப்பின் (The International Baccalaureate Organization) பாடத்திட்ட தரநிலைகளைச் செயல்படுத்தும் அதே வேளையில், மலேசிய தேசிய பாடத்திட்டத்தின் சிஜில் பெலாஜாரான் மலேசியா (மலாய்: Sijil Pelajaran Malaysia ஆங்கிலம்: Malaysian School Certificate) (SPM) பாடங்களையும் கோலா கங்சார் மலாய் கல்லூரி கற்பிக்கிறது.

Remove ads

பொது

சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையத்தின் தலைமையிலான உலகளாவிய முன்னணி-எட்ஜ் பள்ளிகளின் கூட்டணி (Global Alliance of Leading-Edge Schools) என்று அழைக்கப்படும் உலகின் சிறந்த மேல்நிலைப் பள்ளிகளின் பன்னாட்டு அமைப்பிலும் கோலா கங்சார் மலாய் கல்லூரி உறுப்பினராக உள்ளது.

தற்போதைய மாணவர்களில் சுமார் 10% பேர் மலேசிய நடுவண் வங்கி, டெலிகோம் மலேசியா, யாயாசான் பெனராஜு பெண்டிடிக்கான் பூமிபுத்ரா (Yayasan Peneraju Pendidikan Bumiputera) போன்ற பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவித் தொகையைப் பெறுகிறார்கள்.

Remove ads

அரச ஆதரவு பள்ளி

மலேசியாவில் அரச ஆதரவின் கீழ் உள்ள இரண்டு உறைவிடப் பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்றாகும்.[7] மற்றொரு பள்ளி சிலாங்கூர் சுல்தானின் ஆதரவின் கீழ் உள்ள ஆலாம் சா பள்ளியாகும்.[8]

இந்தப் பள்ளியின் புரவலர் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை ஆகும். மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை ஆதரவின் கீழ் உள்ள இந்தப் பள்ளிக்கு மலேசியாவின் மன்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும்; பள்ளியின் வாரியத் தலைவரான பேராக் சுல்தான் ஒவ்வோர் ஆண்டும் அரச வருகை தருகிறார்கள். அத்துடன் கோலா கங்சார் மலாய் கல்லூரியின் வாரிய உறுப்பினர்கள் அனைவரும் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையினால் நியமிக்கப்படுகிறார்கள்.

Remove ads

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

மேலும் காண்க

மேலும் படிக்க

சான்று நூல்கள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads