சங்கர கௌரீசுவரர் கோயில்
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கரகௌரீசுவரர் கோயில் (Shankaragaurishvara Temple) என்பது இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இது இந்தியாவின் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியிலுள்ள பாரமுல்லாவுக்கு அருகிலுள்ள பட்டான் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
பொ.ச.883-க்கும் 902-க்கும் இடையில் ஆண்ட காஷ்மீரின் சங்கரவர்மன் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது.[1] கோவில் சிதிலமடைந்த நிலையில், பூசைகள் நடத்தப்படுவதில்லை. இது சங்கராச்சாரியார் கோயிலைப் போன்ற பாணியில் கட்டப்பட்டுள்ளது.[2] ஜம்மு -காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் 15க்கும் மேற்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.[3]
Remove ads
வரலாறு
உத்பால வம்சத்தை நிறுவிய அவந்திவர்மன் இறந்த பின்னர் அவரது மகன் சங்கரவர்மன் பொ.ச.883 இல் ஆட்சிக்கு வந்தார். இவரது காலத்தில் இக்கோயில் (883 – 902) என்பவரால் கட்டப்பட்டது.[4][5] ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகராக இருந்த சிறீநகர் நகரத்திலிருந்து 27 கிலோமீட்டர்கள் (17 மைல்) தொலைவிலுள்ள சங்கரபட்டனம் (இன்றைய பதான்) என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் அவர் கோயிலைக் கட்டினார். அவர் கோயிலை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார். இந்தக் கோயிலைத் தவிர, அவர் தனது மனைவியின் நினைவாக, கோயிலுக்கு அடுத்ததாக மற்றொரு கோயிலையும் கட்டி, அதற்கு சுகந்தீசர் கோயில் என்று பெயரிட்டார். இதுவும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதே திட்டத்தில் மேலும் சிக்கலான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆனால் இது மிகவும் சிறிய அளவில் உள்ளது. தற்போது இரண்டு கோவில்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.[1][5][6]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
