சசி பாஞ்சா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சசி பாஞ்சா ஒரு மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது மேற்கு வங்க அரசாங்கத்தின் தொழில்கள், வர்த்தகம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
Remove ads
இளமை
ஆந்திராவின் தெனாலி நகரைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்தில் பாஞ்சா பிறந்தார். இவரது தந்தை பிள்ளலமாரி டி கிருஷ்ணையா இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை தொழில்துறை பொறியாளராக இருந்தார். கொல்கத்தாவில் உள்ள இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் மற்றும் கருவுறாமை பயிற்சியில் நிபுணத்துவத்துடன் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் கல்வியினை முடித்தார். இவர் மூத்த அரசியல்வாதி அஜித் குமார் பாஞ்சாவின் மகன் பிரசுன் குமார் பாஞ்சாவை மணந்தார்.[1][2][3]
Remove ads
அரசியல்
2010ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஞ்சா, கல்விப் பொறுப்பில் மாநகரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[4]
பாஞ்சா 2011இல் சியாம்புகூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியிலிருந்து 2016 மற்றும் 2021-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
பாஞ்சா மேற்கு வங்க அமைச்சரவையில் மாநில அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். திசம்பர் 2013-இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.[6] மே 2014-இல், சமூக நலத்துறையின் கூடுதல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.[7]
2021ஆம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்க மாநிலத்தின் 21வது அமைச்சரவைக் குழுவின் ஒரு அமைச்சராகப் பதவியேற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads