இல. கணேசன்

இந்திய அரசியல்வாதி, மணிப்பூர் மாநிலத்தின் மேனாள் ஆளுநர் From Wikipedia, the free encyclopedia

இல. கணேசன்
Remove ads

இல. கணேசன் (Ila. Ganeshan, 16 பிப்ரவரி 1945 – 15 ஆகத்து 2025) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.[2][3] இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[4] பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.[5] பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.[6] பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் இல. கணேசன், 19வது நாகாலாந்து ஆளுநர் ...
Remove ads

தொடக்க கால வாழ்க்கை

1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தார்.[7] இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.[8][9]

அரசியல் வாழ்க்கை

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.[10]

ஆகத்து 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. திரௌபதி முர்மு அவர்களால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு

18 சூலை 2022 அன்று, ஜகதீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணைத் தலைவர் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, கணேசன் மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்று 17 நவம்பர் 2022 வரை பதவிவகித்தார்.[11]

இறப்பு

சர்க்கரை நோயால் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார், கணேசன். பின்னர், 2025 ஆகத்து 5 அன்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கால் மரத்துப் போனதால், சுயநினைவற்ற நிலையில் சரிந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் தலையில் காணப்பட்ட இரத்தக் கட்டிக்கு அறுவை சிகிச்சைக்கு பலனின்றி 15 ஆகத்து 2025 அன்று இறந்தார்.[12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads