சரவாக் கட்சிகள் கூட்டணி

சரவாக் மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணி From Wikipedia, the free encyclopedia

சரவாக் கட்சிகள் கூட்டணி
Remove ads

சரவாக் கட்சிகள் கூட்டணி அல்லது ஜிபிஎஸ் (ஆங்கிலம்: Sarawak Parties Alliance; மலாய்: Gabungan Parti Sarawak (GPS); சீனம்: 砂拉越政黨聯盟; ஜாவி: ݢابوڠن ڤرتي سراوق) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணியாகும்.

விரைவான உண்மைகள் சரவாக் கட்சிகள் கூட்டணி Sarawak Parties Alliance, சுருக்கக்குறி ...

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தில் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோல்வியைத் தொடர்ந்து, சரவாக்கில் மட்டுமே இயங்கும் நான்கு முன்னாள் பாரிசான் நேசனல் (பிஎன்) கூறுக் கட்சிகளால், இந்தச் சரவாக் கட்சிகள் கூட்டணி நிறுவப்பட்டது.[7]

தற்போது மக்களவையில் 23 இடங்களுடன் நான்காவது பெரிய அரசியல் கூட்டணியாக உள்ளது. மேலும் சரவாக் மாநிலத்தில் இந்தக் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்து உள்ளது.

Remove ads

உருவாக்கம்

சரவாக் கட்சிகள் கூட்டணி 12 ஜூன் 2018-இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள்:

இந்த நான்கு கட்சிகளும் பாரிசான் நேசனல் (பிஎன்) கூட்டணியின் முன்னாள் கூறு கட்சிகளாக இருந்தன. பாரிசான் நேசனல் கூட்டணியில் இருக்கும் தீபகற்ப மலேசியக் கட்சிகளும்; சபா மாநிலக் கட்சிகளும்; ஒருபோதும் சரவாக்கில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாது என்ற ஓர் உடன்படிக்கையுடன் இந்தச் சரவாக் கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டது.[10]

கூட்டணியின் கொள்கைகள்

மலேசியா ஒப்பந்தத்தின் (Malaysia Agreement) அடிப்படையில் மாநில நலன்கள் மற்றும் உரிமைகளில் சரவாக் கட்சிகள் கூட்டணி கவனம் செலுத்தும்; மற்றும் பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) நடுவண் அரசாங்கத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும் எதிர்க் கூட்டணியாகவே இருக்கும் என்பது இந்தக் கூட்டணிக் கொள்கைகளில் ஒன்றாகும்.[7]

2018 ஆகஸ்டு 23-ஆம் தேதி, அதன் தலைவரான அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Zohari Openg), ஜிபிஎஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சங்கங்களின் பதிவாளரின் (Registrar of Societies (RoS) அதிகாரபூர்வக் கடிதத்திற்காகக் காத்து இருப்பதாக அறிவித்தார்.[11] இந்தக் கூட்டணி இறுதியாக 19 நவம்பர் 2018-இல் சட்டப்பூர்வமாக்கப் பட்டது.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads