சாந்தா பி. நாயர்
மலையாள இசைக் கலைஞர் மற்றும் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தா பி. நாயர் (Santha P. Nair) (6 பிப்ரவரி 1929 - 26 சூலை 2008) மலையாளத் திரையுலகில் பின்னணி பாடகியாக இருந்தார். இவர் கேரளாவின் திரிச்சூரில் வசித்து வந்தார் .
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
திரிச்சூரிலுள்ள பிரபலமான அம்பாடி குடும்பத்தில் வாசுதேவ போதுவால், இலட்சுமி ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். இவர், மிகச் சிறிய வயதிலேயே தனது திறனைக் காட்டினார். சென்னை, இராணி மேரிக் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார்.
பாடும் தொழில்
பின்னணி பாடலுக்குள் நுழைவதற்கு முன்பு கோழிக்கோடு, அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்து வந்தார். (1953) திரமாலா படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். இசையமைப்பாளர் விமல் குமாரின் இசையில் இவரது முதல் பாடல் 'அம்மாதன் தங்கக்குடமே' என்ற தாலாட்டு பாடல் வெளிவந்தது. இவர் 1951 முதல் 1967 வரை நூற்றுக்கணக்கான மலையாளப் படங்களில் பாடினார். இவர் கர்நாடக இசையில் சமமான புலமை பெற்றவராக இருந்தார். பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். ஒருமுறை, சலில் சௌதுரி இல்லாத நிலையில், இவர் இயக்குநர் இராமு கரியத்துக்காக மாக்கத்து போய் வரம் மானதே என்ற பாடலை இயற்றினார். அதைக் கேட்ட சலீல் சௌத்ரி பாடலில் மாற்றம் ஏதும் செய்யாமல் படத்தில் இடம்பெறச் செய்தார்.
செம்மீன் படப்பாடல்களை பாடினார். எஸ். ஜானகியுடன் இணைந்து 1961 ஆம் ஆண்டில் வி சிதம்பரநாத்தின் முறப்பென்னு படத்திற்காக பாடிய கடவத்து தோனி அடுத்தாபோல் பாடல் இவரது கடைசி பாடலாக இருந்தது. ஒரு நிகழ்ச்சிக்காக ஜவகர்லால் நேருவுக்கு முன் வந்தே மாதரம் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
Remove ads
விருதுகள்
மலையாள மெல்லிசையில் பங்களித்ததற்காக இவர் 1987ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார். 2005ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. இவருக்கு 'கைரளி சுவராலயா வாழ்நாள் சாதனையாளர்' விருதும், 'இலக்ஸ் ஏசியாநெட் வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர், மலையாளத் திரைக்கதை எழுத்தாளர் கை. பத்மநாபன் நாயரை மணந்தார். இவர் தனது 79ஆவது வயதில் 2008இல் இறந்தார். இவரது மகள் இலதா ராஜுவும், மருமகன் ஜே. எம். ராஜுவும் மலையாளத் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர்களாக உள்ளனர் .[1] இவரது பேரன் ஆலப் ராஜு மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் பின்னணி பாடகராக இருக்கிறார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads