சான் சோவ் லின் நிலையம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; புத்ராஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந் From Wikipedia, the free encyclopedia

சான் சோவ் லின் நிலையம்map
Remove ads

சான் சோவ் லின் நிலையம் (ஆங்கிலம்: Chan Sow Lin Station; மலாய்: Stesen Chan Sow Lin; சீனம்: 陈秀连站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; புத்ராஜெயா வழித்தடம் ஆகிய மூன்று வழித்தடங்களில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் AG11 SP11 PY24 சான் சோவ் லின், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் அம்பாங் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்களுக்கான தரநிலை நிலையத்தையும், புத்ராஜெயா வழித்தடத்திற்கான நிலத்தடி நிலையத்தையும் கொண்டுள்ளது. இரண்டு நிலையங்களும் ஓர் உயரமான பாதசாரி நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையம் கட்டணம் செலுத்தும் ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது.

Remove ads

பொது

அம்பாங் வழித்தடம் (செந்தூல் தீமோர்-அம்பாங்) மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் (செந்தூல் தீமோர்-புத்ரா அயிட்ஸ்) ஆகிய இரண்டு வழித்தடங்களும் பகிரும் பொதுவான பாதையில் இந்த சான் சோவ் லின் நிலையம் முதல் நிலையம் ஆகும்.

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பு நிலத்தடி நிலையம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த சான் சோவ் லின் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.

சான் சோ லின்

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள சான் சோவ் லின் சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. சான் சோ லின் (Chan Sow Lin), 1845-1927) என்பவர் இரும்புத் தொழிலில் ஒரு தொழிலதிபர் ஆகும் அவரின் நினைவாக சான் சோவ் லின் சாலைக்கு பெயரிடப்பட்டது. இவர் மலாயாவில் இரும்பு வேலைகளின் தந்தை என்றும் அறியப்படுகிறார்.[3]

மிகார்ஜா நிலையத்திற்கு (Miharja LRT station) அருகில் இந்த சான் சோவ் லின் நிலையம் அமைந்துள்ளது. புத்ராஜெயா வழித்தடத்தின் கடைசி நிலத்தடி தொடருந்து நிலையம் இந்த சான் சோவ் லின் நிலையம் ஆகும்

Remove ads

புத்ராஜெயா வழித்தடம்

புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் (Putrajaya Line) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.

இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.

குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது.

Remove ads

காட்சியகம்

சான் சோவ் லின் நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads