கூச்சாய் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, கோலாலம்பூர், கூச்சாய் லாமா பகுதியில் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூச்சாய் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kuchai MRT Station; மலாய்: Stesen MRT Kuchai) என்பது மலேசியா, கோலாலம்பூர் தென்கிழக்குப் பகுதியில் கூச்சாய் லாமா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். கூச்சாய் லாமா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
தற்போது PY26 பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்திற்கும் PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் PY27 எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1]
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது. இந்த நிலையத்தின் அசல் பெயர் கூச்சாய் லாமா; பின்னர் கூச்சாய் என்று மாற்றம் செய்யப்பட்டது.
Remove ads
வரலாறு
இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் கூச்சாய் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.
முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த PY27 கூச்சாய் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.[1]
கட்டுமானங்கள்
டபிள்யூ-சிடி நிறுவனத்துடன் (WCT Holdings Berhad) மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான உடன்படிக்கையின் கீழ் கூச்சாய் எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 199.5 மில்லியன் மதிப்பிலான PY27 கூச்சாய் எம்ஆர்டி நிலைய கட்டுமான கட்டமைப்புகள் டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.
கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும். அவற்றுள் PY28 தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தின் கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளும் உள்ளடங்கும்.[2][3][4]
அத்துடன், பண்டார் மலேசியா தொடங்கி கம்போங் முகிபா (Kampung Muhibbah) புறநகர்ப் பகுதி வரையிலான நிலத்தடி இருப்புப்பாதையின் கட்டுமானமும் அந்த உடன்படிக்கையில் அடங்கும். இந்த உடன்படிக்கையும் அதே டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் நவம்பர் 2016-இல் RM 896.4 மில்லியனுக்கு வழங்கப்பட்டது.[5]
Remove ads
செயல்பாடு
கூச்சாய் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களுக்கு மார்ச் 16, 2023 அன்று திறக்கப்பட்டது. KC03 PY13 கம்போங் பத்து நிலையம் முதல் PY41 புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் தற்போதைக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.
பேருந்து சேவைகள்
Remove ads
காட்சியகம்
கூச்சாய் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

