சாய்பாபா காலனி
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாய்பாபா காலனி (Sai Baba colony) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். 1939 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சாய்பாபா கோயில் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் சாய்பாபா கோயிலான இக்கோயில் (தென்னிந்தியாவின் சீரடி என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளதின் காரணமாக இப்பகுதி, சாய்பாபா காலனி என்ற பெயரைப் பெற்றது.[1] சாய்பாபா காலனியில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் நகரியல் பயிற்சி மைய வளாகம் ஒன்று உள்ளது.[2]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 462 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சாய்பாபா காலனியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'25.7"N 76°56'42.7"E (அதாவது, 11.023800°N 76.945200°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு ஆகியவை சாய்பாபா காலனிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
சாய்பாபா காலனியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது.[3] ரூ.50 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில், சாய்பாபா காலனி சந்திப்பில் சுமார் 1.14 கி.மீ. நீளத்தில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[4]
தொடருந்து போக்குவரத்து
சாய்பாபா காலனியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஒரு தொடருந்து நிலையம்.
வான்வழிப் போக்குவரத்து
இங்கிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
கல்வி
பள்ளிகள்
வி. வி. வாணி வித்யாலயா (மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி), அங்கப்பா சீனியர் மேல்நிலை சி. பி. எஸ். இ. பள்ளி, லிசியுக்ஸ் (Lisieux) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாய்பாபா காலனியிலுள்ள முக்கிய பள்ளிகளாகும்.
பொழுதுபோக்கு
பூங்கா
பொழுதுபோக்கிற்காக மக்கள் இங்குள்ள பாரதி பூங்கா வந்து செல்லுகின்றனர்.
அரசியல்
சாய்பாபா காலனியானது, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். மக்களவைத் தொகுதி உறுப்பினராக பி.ஆர். நடராஜன், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், இப்பகுதி, கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக அம்மன் கே. அர்ஜூனன், 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads