சாரங் காட்சிக் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாரங் என்பது இந்திய வான்படையின் உலங்கு வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு ஆகும். இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்ட ஐந்து எச்.ஏ.எல். துருவ் உலங்கு வானூர்திகளை பயன்படுத்துகின்றது. இந்த பிரிவு தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமான படை நிலையத்தை தளமாக கொண்டு செயல்படுகின்றது.
Remove ads
சொற்பிறப்பியல்
சாரங் என்ற வார்த்தைக்கு சமசுகிருதத்தில் மயில் என்று பொருள்.[1] மயில் இந்தியாவின் தேசியப் பறவை ஆகும்.
வரலாறு
இந்தக் குழு முதலில் புதிதாக எச்.ஏ.எல். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலங்கு வானூர்திகளை மதிப்பீடு செய்ய இந்திய வான்படையின் ஒரு பிரிவாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1] பின்னர் இது ஒரு உலங்கு வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழுவாக அக்டோபர் 2003 இல் மாற்றப்பட்டது. இந்தக் குழு அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப்படையின் எண் 151 உலங்கு வானூர்தி படைப்பிரிவாக 2005 இல் நிறுவப்பட்டது.[1] 2009 ஆண்டில் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படை நிலையத்திற்கு தளத்தை மாற்றுவதற்கு முன்பு இந்த குழு ஆரம்பத்தில் பெங்களூருக்கு அருகிலுள்ள யெலகங்கா விமானப்படை நிலையத்திலிருந்து செயல்பட்டது.[2]
Remove ads
அமைப்பு
இந்தக் குழு எச்.ஏ.எல். நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட துருவ் எம்கே-1 ரக உலங்கு வானூர்திகளைப் பயன்படுகின்றது. 2024 ஆண்டு நிலவரப்படி, இந்தக் குழு மயில் சின்னம் பொறிக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட ஐந்து துருவ் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்துகிறது.[4]
2004 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த ஆசிய விண்வெளி கண்காட்சியில் இந்த அணியின் முதல் செயல்விளக்கக் காட்சி நடத்தப்பட்டது. ஏரோ இந்தியா கண்காட்சி, விமானப்படை தினம், கடற்படை வார கொண்டாட்டங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற நிகழ்வுகளில் இந்த குழு பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தியது. 2024 இல், இந்தக் குழு சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக காட்சிகளை நிகழ்த்தியது.[5]
இந்தக்குழு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பிலும் ஈடுபட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு உத்தரகண்ட் வெள்ளத்தின் போது சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதில் இந்தக் குழு ஈடுபட்டது. 2015 சென்னை வெள்ளம், 2018 கேரளா வெள்ளம், 2017 ஓக்கி சூறாவளி மற்றும் 2023 மிச்சாங் சூறாவளி போன்ற சூறாவளிகளுக்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரழிவுகளின் போது உணவு பொட்டலங்கள், நிவாரணப் பொருட்களைக் வழங்குதல் மற்றும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதில் இந்த குழு ஈடுபட்டது.[5]
சம்பவங்கள்
பிப்ரவரி 2007 இல், ஏரோ இந்தியா 2007 க்கு முன் ஒரு பயிற்சி அமர்வின் போது யெலகங்கா விமானப்படை நிலையத்திற்கு அருகே இந்த அணியின் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது.[6][7] இந்த விபத்தில் விமானி சுகுவாட்ரன் தலைவர் பிரியேஷ் சர்மா கொல்லப்பட்டார் மற்றும் விமானி விங் கமாண்டர் விகாஸ் ஜெட்லி பலத்த காயமடைந்தார். ஜெட்லி நான்கு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த பின்னர் 2011 இல் சிகிக்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.[8][9]
Remove ads
படத்தொகுப்பு
- சாரங் குழு மாற்றியமைக்கப்பட்ட துருவ் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்துகிறது
- இந்த வானூர்திகளில் சிறப்பு மயில் வர்ணம் பூசப்பட்டுள்ளன
- பொதுவாக, நான்கு உலங்கு வானூர்திகள் விமானக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads