சிக்கந்தர் லௌதியின் கல்லறை

கல்லறை From Wikipedia, the free encyclopedia

சிக்கந்தர் லௌதியின் கல்லறைmap
Remove ads

சிக்கந்தர் லௌதியின் கல்லறை (Tomb of Sikandar Lodi) என்பது இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள லௌதி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரானசிக்கந்தர் லௌதியின் (ஆட்சி: 1489-1517 பொ.ச.) கல்லறை ஆகும்.[1] இந்த கல்லறை தில்லியில் உள்ள லௌதி தோட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது பொ.ச 1517-1518 இல் அவரது மகன் இப்ராகிம் லௌதியால் கட்டப்பட்டது.[2] இந்த நினைவுச்சின்னம் பாரா கும்பத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதி முன்பு கைர்பூர் என்ற கிராமமாக இருந்தது.[1]

விரைவான உண்மைகள் சிக்கந்தர் லௌதியின் கல்லறை, வகை ...
Remove ads

வரலாறு

பஹ்லுல் லௌதியின் மகனான சிகந்தர் லௌதி (பிறப்பு நிசாம் கான்), பொது ஊழி 1489 - 1517-க்குமிடையே தில்லியின் சுல்தானாக இருந்தார். 1489 -இல் தனது தந்தை இறந்த பிறகு, அதே ஆண்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டு, 1517-இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.[3] 1517-இல் சிக்கந்தர் லௌதி இறந்தவுடன், இவரது மகன் இப்ராகிம் லௌதி இக் கல்லறையைக் கட்டினார். சிக்கந்தர் லௌதியின் கல்லறை லௌதி தோட்டத்தில் அமைந்துள்ள சையிது வம்ச முகமது ஷாவின் கல்லறையால் ஈர்க்கப்பட்டது.[4]

Remove ads

கட்டுமானமும் கட்டிடக்கலையும்

இக் கல்லறை இந்திய-இசுலாமியக் கட்டிடக்கலை பாணியில் எண்கோண வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லறை இந்திய துணைக்கண்டத்தின் முதல் தோட்டக் கல்லறையும், ஆரம்பகால மூடப்பட்ட தோட்டக் கல்லறையுமாகும்.[5]

கல்லறையானது ஒரு வலுவூட்டப்பட்ட வளாகத்திற்குள் (தெற்கு நுழைவாயிலில் இருந்து ) இரண்டு குடை வடிவ குவிமாடங்களைக் கொண்ட பிரதான நுழைவாயிலுடன் கட்டிடத்தை பாதுகாக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[6][7] முன்பக்கத்தில் உள்ள சதுர மேடையில் உள்ள இரண்டு அரங்குகளிலும் நீல ஓடுகளின் எச்சங்கள் உள்ளன.[8] கல்லறை ஒரு பெரிய தோட்டத்திலும், உயரமான எல்லை சுவர்களின் மத்தியிலும் அமைந்துள்ளது. கல்லறை அறை ஒரு பரந்த முற்றத்தால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கமும் மூன்று வளைவுகளால் துளையிடப்பட்ட செதுக்கப்பட்ட தூண்களாலும் கோணங்கள் சாய்வான முட்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.[4][9]

கல்லறைச் சுவர்களில் முகலாயக் கட்டிடக்கலை வடிவமைப்புகள் உள்ளன. மேலும், சுவர்களில் பல வெளிநாட்டு மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.[10]கல்லறை பல்வேறு வண்ணங்களின் பற்சிப்பி ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் உள்ளே, மேற்குச் சுவர் ஒரு சுவர் பள்ளிவாசலாகக் கட்டப்பட்டுள்ளது.[8]

Remove ads

அமைவிடம்

சிக்கந்தர் லௌதியின் கல்லறை இந்தியாவின் புது தில்லியிலுள்ள லௌதி தோட்டத்தின் பகுதியில் அமைந்துள்ளது. நினைவுச்சின்னம் அமைந்துள்ள கிராமம் முன்பு "கைர்பூர்" என்று அழைக்கப்பட்டது. இந்த தோட்டம் மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கில் அம்ரிதா சேர்கில் மார்க், கிழக்கில் மேக்ஸ் முல்லர்மார்க், தெற்கில் லௌதி சாலை எல்லையாக உள்ளது. சப்தர்ஜங் கல்லறை லௌதி தோட்டத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.[11]

புகைப்படங்கள்

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads