சிங்கம்புணரி
டவுன் பஞ்சாயத்து From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கம்புணரி (ஆங்கிலம்:Singampunari), இது இந்தியாவின் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கையிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,442 வீடுகளும், 18,143 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
இது 8.40 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] சிங்கம்புணரி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
சிறப்புகள்
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனையும் தென்னையும் சார்ந்த தொழில்கள் பணத் தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு. சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
