சிஞ்சார்
ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிஞ்சார் (Sinjar) நகரத்தை சிங்கால் (Shingal) எனும் அழைப்பர்.[2] (அரபி: سنجار,[3] குர்தியம்: Shingal,[4] இந்நகரம் ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், சிஞ்சார் மலையடிவாரத்தில் 522 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2013-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்நகரத்தின் மக்கள்தொகை 88,023.[5] சிஞ்சார் நகரம் பெரும்பாலான யசீதி மக்களின் தாயகமான உள்ளது. மேலும் சிஞ்சார் மலைகள் யசீதி மக்களின் புனித மலையாக உள்ளது.
Remove ads
வரலாறு
கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு இந்நகரத்தை கைப்பற்றி, இராணுவத்தளம் அமைத்து சிங்காரா என பெயரிட்டனர். கிபி 360-இல் சாசானியப் பேரரசு இந்நகரைக் கைப்பற்றினர். கிபி 6-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் இசுலாமிய படையெடுப்புகளால் கலீபா இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.[6]
2014-இல் இசுலாமிய அரசுப் படைகள் சிஞ்சார் நகரத்தைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான யசீதி மக்களை கொன்று குவித்ததுடன், யசீதி பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.[7][8]
13 நவம்பர் 2014-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் உதவியுடன் குர்திஸ்தான் மற்றும் யசீதிப் படைகள் கைப்பற்றினர்.[9]
Remove ads
தன்னாட்சி

ஆகஸ்டு 2017-இல் யசீதி மக்கள் சிஞ்சார் பகுதியை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தனர். யசீதி மக்கள்[10]
இதனால் சிஞ்சார் நகர யசீதி மக்கள் குர்து படைகளுக்கும், ஈராக்கிய படைக்களுக்கும் இடையே பந்தாடப்பட்டனர்.[11]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads