சித்திரை

தமிழ் புத்தாண்டு From Wikipedia, the free encyclopedia

சித்திரை
Remove ads

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஓர் ஆண்டுக்குரிய பன்னிரண்டு மாதங்களில் சித்திரை ஒன்றாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சூரியமானத்தின்படி இம்மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

விரைவான உண்மைகள் சித்திரை, நாட்காட்டி ...

இராசிச்சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.[1][2][3]

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப்பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர். சித்திரை மாதம் என்பது பொதுவாக வெப்பம் முகுழ்ந மாதமாகும். இம்மாதத்தில் தான் அக்கினி நட்சத்திரம் வருகிறது.

Remove ads

விழாக்கள்

சமண நூல்களின்படி, மகாவீரர் கிமு 599 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் சந்திரனின் பிரகாசமான அரை நிலவு நாளில் பிறந்தார்.[4][5] எனவே சைனர்கள் சித்திரை மாதத்தில் சைன சமயத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான மகாவீரர் ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர்.

சித்திரை மாதம் இளவேனிற்காலம் முடிவதுடன் தொடர்புடையது. வண்ணமயமான வசந்த விழாவான ஹோலி, சித்திரைக்கு முந்தைய மாதமான பங்குனி மாதத்தின் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.

சித்திரை முதல் நாள் நாள் இந்து புத்தாண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மகாராட்டிரத்தில் குடீ பாடவா[6] என்றும், தமிழ்நாட்டில் புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது.[7]

மதுரையின் புகழ்பெற்ற விழாவான சித்திரைத் திருவிழா சித்திரை மாதம் வளர்பிறையில் தொடங்கி முழுநிலவு நாளில் முடிவடைகிறது. சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று சொக்கநாதருக்கும் அங்கயற்கன்னிக்கும் திருக்கல்யாணம் நடக்கும். விழாவின் கடைசி நாளான முழுநிலவு நாளில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்வார்.

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads