சுங்கை பூலோ மருத்துவமனை

மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோவில் உள்ள மருத்துவமனை From Wikipedia, the free encyclopedia

சுங்கை பூலோ மருத்துவமனைmap
Remove ads

சுங்கை பூலோ மருத்துவமனை (மலாய்: Hospital Sungai Buloh; ஆங்கிலம்: Serdang Hospital அல்லது Sungai Buloh Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் அரசு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 130 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய வளாகம் ஏறக்குறைய 141,000 சதுர அடி (13,100 மீ2) பரப்பளவைக் கொண்டது.[2]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
சுங்கை பூலோ மருத்துவமனை; அமைவிடம்

2.80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கோம்பாக் மாவட்டம், பெட்டாலிங் மாவட்டம், மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இந்த மருத்துவமனை சேவை செய்கிறது.[3]

Remove ads

பொது

சுங்கை பூலோ மருத்துவமனை 1999-இல் உருவாக்கப்பட்டது; மற்றும் கூடுதலாகி வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகையைக் குறைக்கவும், இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.[3]

துனாஸ் செலாத்தான் (Tunas Selatan Sdn Bhd) என்ற நிறுவனத்தால் 2006-ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கான மறு கட்டுமானம் நடைபெற்றது; மற்றும் இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு RM 1.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவானது.[4] மறு கட்டுமானத்திற்கான அனைத்துச் செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

Remove ads

சிறப்புகள்

  • தொற்று நோய்கள் சிகிச்சை
  • அவசரநிலை சிகிச்சை
  • அதிர்ச்சி நிலை சிகிச்சை
  • நரம்பியல் அறுவை சிகிச்சை
  • முகத்தாடை அறுவை சிகிச்சை
  • ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  • தீ சிகிச்சை
  • எலும்பு காய அறுவை சிகிச்சை

ஆகிய 8 வகை சிகிச்சைகளுக்கான சிறந்த மையமாக சுங்கை பூலோ மருத்துவமனை அடையாளம் காணப்பட்டுள்ளது.[5]

விருதுகள் மற்றும் சாதனைகள்

மேலதிகத் தகவல்கள் Year, Nominated work ...

முகவரி

Hospital Sungai Buloh
Jalan Hospital, 47000, Sungai Buloh, Selangor Darul Ehsan
Tel : +603-61454333
இணையத் தளம்: jknselangor.moh.gov.my/hsgbuloh/index.php/ms/mengenai-kami/latar-belakang

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads