சுனிதா (நடிகை)

நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

வித்யா ஸ்ரீ என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 1986 முதல் 1996 வரை தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டர்.

விரைவான உண்மைகள் வித்யா ஸ்ரீ, பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

முக்தா எஸ். சுந்தர் இயக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான கோடை மழை திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் நுழைந்தார். அப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ரஜினிகாந்த் (முதன்மைப் பாத்திரமல்ல, விருந்தினர் பாத்திரம்), பிரசாத் லட்சுமி ஆகியோர் உடன் நடித்தனர். மேலும் பி. வாசு இயக்கி, விஜயகாந்த் நடித்த பொன்மன செல்வன் (1989) படத்திலும். அதே ஆண்டு விஜயகாந்த்துடன் நடித்த ராஜநடை, வரவு நல்ல உறவு (1990) ஆகிய படங்கள் வெளியாயின. வரவு நல்ல உறவு படத்திற்கு விசு சிறந்த கதை எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்றார். டி. என் கண்ணா இயக்கிய பெண் சார்ந்த கதையான நெஞ்ச தொட்டு சொல்லு என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்தார்.

1987 இல் இவர் சாஜன் இயக்கிய நிறபேதங்கள் என்ற மலையாளத் திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தில் இவருடன் பிரதாப் போத்தன், அம்பிகா, கீதா, கனிகேனம் நேரம் ஆகியோர் நடித்தனர். ராஜசேனன் இயக்க ரத்திஷ் மற்றும் சரிதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். பின்னர் மேலும் பல மலையாள படங்களில் நடித்தார்.

ராகவேந்திரா ராஜ்குமார் நடிக்க எம். எஸ். ராஜசேகர் இயக்கிய அனுகுலகோபா கண்டா திரைப்படங்கள் மூலம் 1990 இல் கன்னட திரையுலகில் நுழைந்தார். கன்னடத்தில் மேலும் சில படங்கள் நடித்தார்.

இவர் இந்திய முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெகதீஷ், முகேஷ், ஜெயராம், சுரேஷ் கோபி, அம்பரீஷ், அனந்த் நாக், சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் போன்ற பலருடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார்.

Remove ads

நடனக் கலைஞராக

கோடை மழை வித்யா, வித்யாஸ்ரீ என்றும் அழைக்கப்படும் சுனிதா, நன்கு அறியப்பட்ட இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம் பயின்றவர். இவர் 3 வயதில் நடனமாடத் தொடங்கி, 11 வயதில் அரங்கேற்றம் செய்தார். "குருகுலம்" என்ற பழைய பாரம்பரியத்தின்படி பயிலும் பாக்கியத்தை இவர் பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ வாழுவூர் ராமையா பிள்ளை மற்றும் அவரது மகன் கலைமாமணி வழுவூர் ஆர். சமராஜ் ஆகியோரிடமிருந்து பரதநாட்டியத்தின் வழுவூர் பாணியில் பயிற்சி பெற்றார். இன்றுவரை, இவர் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன்லால், வினீத் போன்றோருடன் உலகம் முழுவதும் பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிருத்யாஞ்சலி ஸ்கூல் ஆப் டான்ஸில் கலை இயக்குநராக இருந்து நடனப் பள்ளியை சுனிதா நடத்தி வருகிறார்.[1] கடந்த பத்து ஆண்டுகளில் பாரம்பரிய நடனம் கற்பிப்பதற்கும், நிகழ்த்துவதற்கும் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் தென் கரொலைனாவின் கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஆந்திராவில் வேணுகோபால் சிவராமகிருஷ்ணன் மற்றும் புவனா ஆகியோருக்குப் பிறந்தார். 1996 ஆம் ஆண்டில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 1998 இல் ஷஷாங்க் என்ற மகன் பிறந்தார். இவர் தற்போது அமெரிக்காவின் தென் கரொலைனாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[2]

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads