சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையம்

மலேசியா, பேராக் மாநிலத்தில் ஈப்போ மாநகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையம்map
Remove ads

சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையம் அல்லது ஈப்போ வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IPH, ஐசிஏஓ: WMKI); (ஆங்கிலம்: Sultan Azlan Shah Airport அல்லது Ipoh Airport; மலாய்: Lapangan Terbang Sultan Azlan Shah; சீனம்: 怡保国际机场) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஈப்போ மாநகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் சுல்தான் அசுலான் ஷாவானூர்தி நிலையம்Sultan Azlan Shah Airport, சுருக்கமான விபரம் ...

இந்த வானூர்தி நிலையம், பேராக்; ஈப்போ வாழ் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. ஈப்போ நகர மையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையம் மலேசியாவின் ஏழாவது பரபரப்பான வானூர்தி நிலையமாக விளங்குகிறது.

Remove ads

வரலாறு

தொடக்கத்தில் போக்கர் (Fokker) ரக வானூர்திகளுக்கான சிறிய வானூர்தி நிலையமாக தோற்றுவிக்கப்பட்டது. இறுதியில் தாரை (ஜெட்) வானூர்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.

1989-ஆம் ஆண்டில், பேராக் அரச நகரான கோலாகங்சார் நகருக்கு, இரண்டாம் எலிசபெத் மகாராணியார் வருகை புரிந்தார். அவர் வருகை தருவதற்கு முன்னர் அப்போதைய வானூர்தி நிலையத்தின் முனையம் செப்பனிடப் பட்டது.

சுபாங் வானூர்தி நிலையம்

வடக்கு-தெற்கு விரைவுசாலை திறக்கப்படுவதற்கு முன்னர், இந்த வானூர்தி நிலையத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஈப்போ கோலாலம்பூர் பயணப் பாதையில் மலேசியா ஏர்லைன்ஸ் (Malaysia Airlines) வானூர்தி நிறுவனம் சுபாங்கில் இருக்கும் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்தியது.

இந்தச் சுபாங் வானூர்தி நிலையம், கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், சுபாங் ஜெயா, கிளானா ஜெயா, டாமன்சாரா நகரப் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், பெரும்பாலான ஈப்போ பயணிகள் மலேசியா எயர்லைன்சு வானூர்திச் சேவைக்கு முதலிடம் வழங்கினர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

புதுத் திட்டங்கள்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், பலர் அதிக விலை கொண்ட வானூர்திப் பயணத்தைத் தவிர்த்தனர். அதனால் மலேசியா ஏர்லைன்ஸ் தன் சேவையை நிறுத்திக் கொண்டது. பின்னர் ஏர் ஏசியா நிறுவனமும் தன் கோலாலம்பூர் - ஈப்போ வானூர்திச் சேவையை நிறுத்திக் கொண்டது.

சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையத்தைப் பராமரித்து வரும் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் மாற்றுவழியாக வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் புதுத் திட்டங்களைக் கொண்டு வந்தது.[3]

போயிங் 737 வானூர்திகள்

அந்த வகையில் பெரிய வானூர்திகளின் பயன்பாட்டிற்காக வானூர்தி நிலையத்தை புதுப்பிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ரிங்கிட் 45 மில்லியன் செலவில் புதிய 'நவீன' முனையக் கட்டிடமும்; மற்றும் விரிவாக்கப்பட்ட ஓடுபாதையும் உருவாக்கப்பட்டன.

2,000 மீட்டர்கள் (6,600 அடி) ஓடுபாதை நீளமாக்கப்பட்டது. இதனால் போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 போன்ற பெரிய வானூர்திகள் தரையிறங்கிச் செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.[4]

வெளிநாட்டுச் சேவைகள்

2018-இல், மலிண்டோ ஏர் வானூர்தி நிறுவனம் மேடானுக்கு ஒரு புதிய சேவையைத் தொடங்கியது.

அக்டோபர் 2018-இல், ஏர் ஏசியா வானூர்தி நிறுவனம் ஜொகூர் பாருவில் இருந்து ஈப்போ வரை சேவைகளை மீண்டும் தொடங்கியது.

டிசம்பர் 2018-இல், ஏர் ஏசியா வானூர்தி நிறுவனம் ஈப்போவில் இருந்து சிங்கப்பூர் வரை சேவைகளைத் தொடங்கியது.

Remove ads

வானூர்திச் சேவைகள்

மேலதிகத் தகவல்கள் வானூர்திச் சேவைகள், சேரிடங்கள் ...

[5]சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்[6]

புள்ளிவிவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பயணிகள்வருகை ...

இலக்குகள்

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, இலக்குகள் ...
மேலதிகத் தகவல்கள் தரவரிசை, இலக்குகள் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads