சுவாமி விவேகானந்தா விமானநிலையம்

இந்திய வானூர்தி நிலையம் ( From Wikipedia, the free encyclopedia

சுவாமி விவேகானந்தா விமானநிலையம்map
Remove ads

சுவாமி விவேகானந்த வானூர்தி நிலையம் (Swami Vivekananda Airport) (பிப்ரவரி 2018 வரை VARPஎன குறிப்பிடப்பட்டது).[5][6][7] இந்த விமான நிலையம் முன்பு ராய்ப்பூர் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் முதன்மையான விமான நிலையமாக இது உள்ளது. இந்த விமான நிலையம் ராய்ப்பூருக்கும் நயா ராய்ப்பூருக்கும் இடையில் ( 15 km (9.3 mi) மன்னாவில் அமைந்துள்ளது.[8] பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் 28வது இடத்தினையும் பரபரப்பான விமான இயக்கத்தில் 29வது இடத்தினையும் பெறும் நிலையமாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் சுவாமி விவேகானந்த வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...

இந்த விமானநிலையத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, சுவாமி விவேகானந்தர் நினைவாகப் பெயரிடப்பட்டது. விவேகானந்தர் ராய்ப்பூரில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்ததன் நினைவாகப் பெயரிடப்பட்டது.[9]

Remove ads

ஓடுதளம்

சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதை உள்ளது - ஓடுபாதை 2,286 m (7,500 அடி) நீளமும் 45 m (148 அடி) அகலமும் உடையது. ஓடுபாதையின் நீளம் நீட்டிக்கப்படுவதன் மூலம் 3,251 m (10,666 அடி) நீளமாக மாற்றப்பட உள்ளது.[10]

விமான ஓடு தளம் கேட்-1ல் இரவு நேரங்களில் விமானம் இறங்கும் வசதிகளான ஓடுதளம் 24 மற்றும் டீவிஓஆர், டீஎமஈ, எண்டீபி, மற்றும் பிஏபிஐ கண்காணிப்பு உபகரணங்களைக் கொண்டது.

ஆறு ஏ 320 / பி 737 வகை விமானங்களை நிறுத்தும் வசதியினையும், ஹெலிபேடு ஒன்றும் உள்ளது. விமானநிலையத்தில் செயல்படும் தீயணைப்பு நிலையம் VI வகையுடன் VII மீட்பு வசதியுடன் திறன் வாய்ந்ததாக உள்ளது.[11]

Remove ads

முனையங்கள்

புதிய ஒருங்கிணைந்த முனையம்

புதிய ஒருங்கிணைந்த முனையம் 7 நவம்பர் 2012 அன்று அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களால் திறக்கப்பட்டது. 158 கோடி (ஐஅ$18 மில்லியன்) செலவில் கட்டப்பட்ட இம்முனையம் 20,000 m2 (4.9 ஏக்கர்கள்) பரப்பளவில் கட்டடங்களைக் கொண்டுள்ளது. இம்முனையத்தில் ஒரே நேரத்தில் 400 சர்வதேச பயணிகள் உட்பட 1300 பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய முனையத்தில் இரண்டு ஏரோ-பாலங்கள், எட்டு பயண நுழைவாயில், இருபது சோதனை கவுண்டர்கள், எட்டு ஊடுகதிர் பயண உடைமை சோதனை இயந்திரங்கள், நான்கு பாதுகாப்பு கவுண்டர்கள் மற்றும் பயண உடைமைக்கான இரண்டு நகரும் பட்டைகள் உள்ளன. மூன்றாவது ஏரோ-பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[11][12]

சரக்கு முனையம்

பொதுவான உள்நாட்டு பயனர் சரக்கு முனையம் (சி.யு.டி.சி.டி) 2016 ஜூன் 4ஆம் நாளன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் விமான சரக்கு போக்குவரத்திற்கான மாநிலத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேறியது. AAI பழைய முனையக் கட்டடத்தைச் சரக்கு நடவடிக்கைகளைக் கையாள மாற்றப்பட்டுள்ளது. அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஜி.எஸ்.இ.சி லிமிடெட் ஐந்து வருட காலத்திற்கு இம்முனையத்தினை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளது.[13]

Remove ads

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்

இணைப்பு

ராய்பூர் நகரப் புகைவண்டி நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாண்ட்ரி பேரூந்து முனையத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிடையே வாடகை வாகனங்கள், மற்றும் ராய்ப்பூர் நகர்ப்புற பொது போக்குவரத்து மூலமும் அண்டை நகரங்களான பிலாய் மற்றும் துர்க்குக்கு நேரடி குளிரூட்டப்பட்ட நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

ஓலா மற்றும் உபர் வாடகை கார்கள் விமான புறப்பாடு மற்றும் வருகை வாயில்களில் கிடைக்கின்றன. தனியார் வாடகை வாகனங்கள் சேவை வசதியும் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads