செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில்

From Wikipedia, the free encyclopedia

செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில்map
Remove ads

செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் (Chenkal Maheswaram Sri Shiva Parvathy Temple) என்பது ஒரு சிவன் கோயில் ஆகும். இது கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், உதயங்குளங்கரை எனும் பகுதியில் உள்ள செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. உலக சாதனையாக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இக்கோயிலின் பெயர் இடம்பெற்றுள்ளது.[3]

விரைவான உண்மைகள் செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில்Chenkal Maheswaram Sri Shiva Parvathy Temple, அமைவிடம் ...
Remove ads

சுற்றுலாத் தலம்

இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.[4]

சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உட்பகுதி குகை வடிவில் அமைந்துள்ளது. 8 மாடிகள் உள்ளன. இதன் உட்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவர், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வாஜ முனிவர், அகத்தியர், வசிஸ்டர், கெளதம மகரிஷி, பிருகு மகரிஷி, விஸ்வாமித்திரர், பரசுராமர் மற்றும் பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. [5]

Remove ads

தெய்வங்கள்

மூலவராகச் சிவனும் பார்வதியும், உப தெய்வங்களாகக் கணபதி, முருகன், நவகிரகங்கள், பிரம்ம ராட்சசி, யோகேஸ்வரர் சன்னதிகளும் காணப்படுகின்றன.[6]

அமைவிடம்

திருவனந்தபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில், உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில், செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads