சென்னை மத்திய மெட்ரோ நிலையம்
'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய மெட்ரோ' இரயில் நிலையம், சென்னை, தமிழ்நாட From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பொதுவாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு நிலத்தடி மெட்ரோ தொடர்வண்டி நிலையமாகும்.[1]
சென்னை மெட்ரோ இரு தடங்களிலும் தன் சேவையை செய்கிறது. மத்திய மெட்ரோ நிலையம் சுமார் 30,000 சதுர மீட்டர் (320,000 சதுர அடி) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
மெட்ரோ நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் ஆகியவற்றின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மேல் சென்னை மத்திய மெட்ரோ நிலையம் இரண்டு நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நிலத்தடி இரயில் நிலையமாகும்.[2]. மெட்ரோ திட்டத்தின் கீழ் செயல்படும் இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். நடைமேடை ஒன்றில் விமான நிலையம் முதல் வண்ணாரப் பேட்டை வரையும், நடைமேடை இரண்டில் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் முதல் பரங்கிமலை வழியாக எழும்பூர் மற்றும் கோயம்பேடு வரை இணைப்பு நிலையமாகவும் இது செயல்படுகிறது. மற்றொன்று ஆலந்தூர் மெட்ரோ நிலையமாகும். இந்த மெட்ரோ நிலையம், 28 மீ ஆழத்தில் கட்டப்பட்டு 30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. சென்னை நகரத்தின் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் ஆலந்தூரே மிகப்பெரிய மெட்ரோ நிலையமாகும்[3]. மூன்றாம் நிலை மெட்ரோ நிலையம் 410 மீட்டர் நீளத்தையும் 35 மீட்டர் அகலத்தையும் கொண்டிருக்கும்.[1] பிற மெட்ரோ நிலையங்களைப் போல இல்லாமல் இது நான்கு நுழைவு முனைகளை கொண்ட நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தை அணுக ஆறு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைந்துள்ளன. அவை பூங்கா நிலையம், பூங்கா நகரம், ரிப்பன் கட்டிடம் மற்றும் ராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் போன்றவை ஆகும்.[4][5] இந்த நிலையம் சென்னை சென்ட்ரல், பார்க் டவுன் மற்றும் பார்க் இரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை கொண்டு செல்லும் போக்குவரத்து இடமாக செயல்படுகிறது.[6] மெட்ரோ நிலையத்தை நாள்தோறும் 100,000 நபர்களுக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[7]
மத்திய மெட்ரோ நிலையத்தில் தாழ்வாரத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்ட சில இரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிலையமும் ஒன்றாகும்.[8] . சுமார் 500 கார்கள் மற்றும் 1,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்த இங்குள்ள அடித்தளப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையத்தின் ஒரு அடித்தள மட்டத்தில் விமான நிலையத்தின் சரிபார்க்கும் செயல்முறை வசதியைக் கொண்டு வருவதற்கான திட்டங்களும் உள்ளன. இது விமானப் பயணிகள் நிலையத்திலேயே தங்கள் சரிபார்க்கும் நடைமுறைகளை முடித்துக் கொள்ள அனுமதியளிக்கும்.[9] இம்மெட்ரோ நிலையத்திற்கு எதிரே ஒரு பேருந்து நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.[10] சென்னை மெட்ரோ இரயில் வலைப்பின்னலில் அமைந்துள்ள மூன்று நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இது மாநிலத்தின் மின்சார தொகுப்பிலிருந்து துணை நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக 230- கிலோ வோல்ட்டு மின்சாரத்தை பெறும் வசதியை பெற்றுள்ளது. மற்ற இரண்டு மெட்ரோ நிலையங்கள் கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் முதலியனவாகும்.[11]
சென்னை மத்திய மெட்ரோ இரயில் நிலையம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாளன்று திறக்கப்பட்டது.[1] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, இந்த நிலையத்தில் தினசரி 7,700 பயணிகள் வந்து செல்கிறார்கள்.[12].
Remove ads
நில அமைப்பு
சென்னை மத்திய மெட்ரோ நிலையத்தின் மீது ஒரு பூங்காவை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மத்திய நிலத்தடி மெட்ரோ நிலையம் மீது இரிப்பன் கட்டிட பூங்காவை விரிவுபடுத்தும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. பூங்காவை உருவாக்க வசதியாக நிலையத்தின் மீது நீர்ப்புகா கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இரிப்பன் கட்டிடம் மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா வளாகத்தின் ஆறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதி நீர்ப்புகா கருங்கல் பலகை 210 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவுகளில் அமைக்கப்படும். இரிப்பன் கட்டிட பூங்கா, அம்மா மாளிகை மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா ஆகியவற்றிற்கு வருபவர்கள் மத்திய மெட்ரோ நிலையத்தை அதன் ஏழு நுழைவு வாயில்கள் ஒன்றின் வழியாக அணுகலாம்.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads